Spread the love
ட்றம்பின் தலைக்கு $80 மில்லியன் பரிசு | ஈரான் அறிவிப்பு! 1
ஜனாதிபதி டொனால்ட் ட்றம்ப்

ஜனவரி 06, 2020

அமெரிக்க ஜனாதிபதி ட்றம்பின் ‘தலையைக் கொண்டுவருபவர்களுக்கு’ $80 மில்லியன் பரிசு வழங்கப்படுமென்று (fatwa) ஈரானிய ஆட்சியாளர் தண்டோரா போட்டுள்ளனர். கடந்த வாரம் ஈராக் விமான நிலையத்திலிருந்து வெளியே வரும்போது அமெரிக்க ட்றோண் தாக்குதலில் ஈரானிய கட்ஸ் படையின் தளபதி ஜெனெரல் கசிம் சொலைமானி கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் முகமாக அவரது மரண ஊர்வலத்தில் வைத்துப் பகிரங்கமாக இப் பரிசு அறிவிக்கப்பட்டது.

ஈரானின் சனத்தொகை 80 மில்லியன் என்றும் அவர்களின் தலைக்கு ஒரு டாலர் வீதம் $80 மில்லியன் பரிசாக அறிவிக்கப்பட்டதென்றும் தெரிகிறது.

நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்ட சொலைமானியின் மரணச் சடங்கில் பல மில்லியன் ஈரானியர்கள் பங்குபற்றியிருந்தனர். அமஎரிக்க ஜனாதிபதி ட்றம்பின் தலையைக் கொண்டு வருபவருக்கு $80 மில்லியன் டாலர்கள் பரிசு வழங்கப்படுமென சடங்கை ஒளிபரப்புச் செய்த அரச ஊடகத்தினால் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது.

இதே போல முகமது நபியைத் தன் ‘சேத்தானிக் வேர்செஸ்’ நூலில் அவமதித்திருந்தார் என்ற காரணத்துக்காக, எழுத்தாளர் சல்மான் றஷ்டியின் தலையைக் கொண்டு வருபவர்களுக்கு சுமார் $4 மில்லியன் டாலர்களை பெப்ரவரி 14, 20006 அன்று ஈரானிய அரசு, பரிசாக அறிவித்தது. இந் நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ‘காதலர் தினம்’ ஆகும். ஒவ்வொரு காதலர் தினமன்றும் இரானிய அரசு இப் பரிசு இன்னும் காத்திருக்கிறது என ஞாபகப்படுத்தி வருகிறது.

Print Friendly, PDF & Email