டொமினிக் ஜீவா | மணத்தை விட்டுச் சென்ற மல்லிகை

டொமினிக் ஜீவா | மணத்தை விட்டுச் சென்ற மல்லிகை

ஈழத்து சமூக, இலக்கிய உலகில் டொமினிக் ஜீவாவை அறியாதவர் இல்லை. அறிந்தும் பேச மறுப்பவர்கள் சிலருமுண்டு.

பட்டங்கள் இல்லாமையால் இலக்கிய வானில் பறக்கமுடியாத அல்லது பறப்பு மறுக்கப்பட்ட பல ஆளுமைகளில் ஜீவாவும் ஒருவர். அதனால் அவரது எழுத்தும் வாழ்வும் விளிம்புநிலை மாந்தருக்குத் தீனியானது.

டொமினிக் ஜீவா | மணத்தை விட்டுச் சென்ற மல்லிகை 1

வறுமை, தீண்டாமை, ஏற்றுக்கொள்ளப்படாமை, புறக்கணிப்பு, குழுமனப்பான்மை, ஏளனம், வசைசொல் என்று பலவிதமான இம்சைகளுக்கு முகம் கொடுக்கும் பல இலக்கிய ஆளுமைகள் தமது உள்ளார்ந்த தகிப்பை எரிமலையாகக் கக்குவதற்கு இருந்த ஒரே பள்ளத்தாக்கு கலை, இலக்கியம். அதில் வளர்த்தெடுத்த மல்லிகைச் செடி இன்று நீரூற்றப்படாமல் வாடி நிற்கிறது. ஜீவா தன் பெருங்கடமையிலிருந்து நிரந்தரமாக ஓய்வு பெற்றுவிட்டார்.

அவரது சாதனைகளையும் வேதனைகளையும் ஒரு தராசில் சமப்படுத்தலாம். ஆனாலும் துவண்டு போகாதவர். 1966 இல் ‘மல்லிகையை’ நாட்டி, 2012 வரை பராமரித்து வந்தவர். 46 வருடங்கள் 401 மலர்கள். மணம் பரப்பிய நிறைந்த வாழ்வு. 50 வது மலரை வெளியிட்டுவிட்டுத்தான் நான் விடை பெறுவேன் என்ற அவரது பிடிவாதம் நிறைவேறவில்லை. அவரது ஆத்மா சலனமற்ற பெருவெளியில் இதர படைப்புலகப் பெரியவர்களோடு இலக்கியம் பேசச் சென்றிருக்கிறது. மனதார விடை கொடுக்கிறோம்.

மனமே உடல் என வாழ்ந்து காட்டிய சாந்தி அம்மா மறைவு!