டொனால்ட் ட்றம்ப், மனைவி மெலானியா, இருவருக்கும் கொறோணாவைரஸ் தொற்று – சுய தனிமைப்படுத்தலில் இருக்கிறார்கள்!
அமெரிக்க ஜனாதிபதி, மனைவி ஆகியோருக்கு கொறோணாவைரஸ் தொற்று உறுதி!

டொனால்ட் ட்றம்ப், மனைவி மெலானியா, இருவருக்கும் கொறோணாவைரஸ் தொற்று – சுய தனிமைப்படுத்தலில் இருக்கிறார்கள்!

Spread the love

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்றம்ப் மற்றும் அவரது துணைவியார் மெலானியா ட்றம்ப் ஆகியோருக்கு கொறோணாவைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி ருவீட் செய்துள்ளார்.

வெள்ளை மாளிகைப் பணியாளர் ஹோப் ஹிக்ஸ் வைரஸ் தொற்றுக் கண்டதையடுத்து, டொணால்ட் ட்றம்ப், தானும், மனைவியும், சுய தனிமைப்படுத்தலுக்குப் போவதாக, வியாழன் இரவு ருவீட் செய்துள்ளார்.

“ஹோப் ஹிக்ஸ், சிறிய ஓய்வுதானுமில்லாது கடுமையாகப் பணியாற்றைக்கொண்டிருந்தார். அவருக்கு கோவிட்-19 தொற்று வந்திருப்பதாக இப்போது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. நானும், மெலேனியாவும் பரிசோதனை முடிவுகளுக்காகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்” என ட்றம்ப் முன்னர் ருவீட் செய்திருந்தார்.

31 வயதுடைய ஹிக்ஸ், ஜனாதிபதியுடன் அவரது விமானத்தில் இந்த வாரம் பயணம் செய்திருந்தார். ஜனாதிபதியும் அவரது துணைவியாரும் ஹிக்ஸுடன் நீண்ட நேரம் அருகிலிருந்து பணியாற்றுவது வழக்கம்.

கடந்த சில மாதங்களில், பல வெள்ளை மாளிகைப் பணியாளர்கள் கொறோணாவைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருந்தார்கள்.

Print Friendly, PDF & Email