டெல்ஹி சட்டமன்ற தேர்தல்கள் | ஆம் ஆத்மி கட்சி வெற்றி அமோக வெற்றி!

Spread the love
மோசமான நிலையில் காங்கிரஸ்

பெப்ரவரி 11, 2020

டெல்ஹி சட்டமன்றத் தேர்தல்கள் நிறைவுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அர்வின்ந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி இதுவரையில் 62 ஆசனங்களைப் பெற்று முன்னணியில் இருக்கிறது. அர்விந்த் கெஜ்ரிவால் தனது புதுடெல்ஹி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிரான போராட்டங்களில் முன்னணியை வகுத்துவரும் ஓக்லா தொகுதியில் அமனத்துல்லா கான் வெற்றிபெற்றுள்ளார்.

டெல்ஹி சட்டமன்றத் தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அக் கட்சியின் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால், மக்கள் முன் நன்றி தெரிவித்து உரையாற்றும்போது, “டெல்ஹி மக்கள் புதியதொரு அரசியலின் உதயத்துக்கு வழிவகுத்துள்ளார்கள்” எனத் தெரிவித்தார்.

குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிரான போராட்டங்களை மையப்படுத்தி பா.ஜ.க. தனது பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தது. 2015 தேர்தலில் விட இம்முறை 8 கூடிய ஆசனங்களை வென்றுள்ளது.


ஒரு காலத்தில் தலைநகரில் கொடிகட்டிப் பறந்த கட்சியான காங்கிரஸ் ஒரு ஆசனத்தில் கூட முன்னணி நிலையில் இல்லாதது, அடுத்த ஐந்து வருடங்களுக்கு டெல்ஹி சட்டசபையில் ஒரு உறுப்பினரையும் கொண்டிருக்காத நிலையை எட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Print Friendly, PDF & Email
Related:  கடவுச்சீட்டுகள் பறிமுதல் செய்யப்படும் - த.நாடு அரசு

Leave a Reply

>/center>