டிஸ்கவரி சனலில் ரஜினிகாந்த்!

Spread the love
‘Into The Wild with Bear Grylls’ நிகழ்வில் பங்கு கொள்கிறார்

ஜனவரி 29, 2020

ரஜினி பெயர் கிரில்ஸ் உடன்

டிஸ்கவரி சனல் (இந்தியா) ஒளிபரப்பவிருக்கும் “Into the Wild with Bear Grylls” என்னும் நிகழ்ச்சியின் அடுத்த எபிசோட்டில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதன் தயாரிப்பாளரான Bear Grylls உடன் இணைந்து தோன்றுகிறார். இதை Bear Grylls தனது டுவீட்டர் செய்தியில் பெருமையோடு அறிவித்திருக்கிறார்.

இந்தியாவின் பிரபலங்களை நிகழ்ச்சியில் இணத்துக்கொள்வதன் மூலம் நிகழ்ச்சியின் பார்வையாளர்களை அதிகரிக்கலாம் எனபது தான் அவரது நோக்கம்.

இதற்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை இணைத்துச் செய்த நிகழ்ச்சியை 3.6 மில்லியன் பேர் பார்த்து வரலாறு படைத்ததாக Bear Grylls கூறுகிறார். #ThalaivaOnDiscovery என்ற ஹாஷ்டாக்குடன் நடிகர் ரஜினி காலெடுத்து வைக்கிறார் என அவர் டுவீட் செய்திருக்கிறார்.


‘Into the Wild with Bear Grylls’, Bear Grylls தயாரிக்கும் ஒரு றியாலிட்டி ரெலிவிசன் தொடர். ஒவ்வொரு எப்பிசோட்டுக்கும் ஒவ்வொரு பிரபலத்தைக் கொண்டுவந்து survival skills விடயங்களைப் பற்றி நிகழ்ச்சிகளைத் தயாரிப்பார். இவருடைய நிகழ்ச்சிகள் , Discovery, National Geographic போன்ற பிரபல ஊடகங்களில் ஒளிபரப்பப்படுகின்றன. Bear Grylss உடன், ஒரு கதையமைப்பாளர், இரண்டு ஒளிப்பதிவாளர், இரண்டு ஒலிப்பதிவாளர் ஒரு மலை வழிகாட்டி ஆகிய குழுவாக மலைப்பிரதேசங்கள் வனங்கள் ஆகியவற்றுக்குச் சென்று, கடுமையான சூழல்களில் உயிர்வாழ்தல் பயிற்சிகள் பற்றிய நிகழ்ச்சிகளைப் படமாக்குபவர்.

Ben Stiller, Michael B. Jordan, Michelle Rodriguez, James Marsden, Barack Obama, Narendra Modi என்று பல பிரபலங்களையும் அவர் தனது நிகழ்ச்சிகளில் இணைத்திருக்கிறார். நிகழ்ச்சியின் Season 5, நவம்பர் 2019 இல் ஒளிபரப்பாகியது.

அடுத்த எப்பிசோட்டில் கர்நாடகாவிலுள்ள பாண்டிப்பூர் புலிகள் பராமரிப்பு வனமொன்றில் ரஜினி தோன்றுகிறார்.

தனது அனுபவம் பற்றி ரஜினி பேசும்போது, “Into the Wild ஒரு தனித்துவமான நிகழ்ச்சி. ஒரு வகையில் அது வீரவிளையாட்டுடனான பரவசத்தைக் கொடுத்தாலும் இன்னொரு வகையில் அது சமூகத்துக்குப் பெரும் நன்மையைச் செய்கிறது. எனவே, உலகம் முழுவதும் பிரபலமான ஊடகமான ‘டிஸ்கவரி’ என்னை அணுகியபோது நான் அதற்கு இணங்கினேன். 40 வருட சினிமாவுக்குப் பிறகு நான் தொலைக்காட்சியில் ‘நடிக்கிறேன்’. எனது குரு பாலச்சந்தரின் கவிதாலாயா நிறுவனத்திற்கும் இவ்விடயத்தில் தொடர்பிருக்கிறது. Bear Grylls தனது நிகழ்வில் கலந்துகொள்ளும் பிரபலங்களை அவர்களின் இயலுமையின் எல்லைக்குத் தள்ளுவது வழக்கம். இந்தியாவின் உன்னதமான வனங்களில் எனது வாழ்வியல் சவால்களைப் பரிசோத்தித்துப் பார்ப்பதில் நான் மிகவும் சந்தோசப்படுகிறேன்” எனத் தெரிவித்தார்.

Related:  பொலியூறெத்தேன் கழிவுகளை உண்ணும் பக்டீரியா- விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

ரஜினி பங்குபற்றும் நிகழ்ச்சியில், தண்ணீரைச் சேமிப்பது பற்றியும் ஒவ்வொரு இந்தியனுக்கும் இது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு தண்ணீரைச் சேமிக்கவேண்டும். இது அரச, சமூக, தனியார் மட்டங்கள் ஒவ்வொன்றிலும் நிகழ வேண்டும். இச் செய்தியை மக்களிடம் கொண்டு செல்வதற்கு இன் நிகழ்ச்சி மிகச் சிறந்ததொரு சாதனம்” எனத் தலைவர் மேலும் தெரிவித்தார்.

“தலைவருடன் மிக நெருக்கமாகப் பணியாற்றுவதில் நானும் எனது குழுவும் பெருமைப் படுகிறோம். ரஜினிகாந்த், திரையுலகில் மட்டுமல்லத் தன் பிரத்தியேக வாழ்விலும் செய்துவரும் சாதனைகள் உலகம் முழுவதிலும் அவருக்கு மதிப்பைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது” என Bear Grylls தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

>/center>