டிச. 12 பிரித்தானிய தேர்தல் | கன்சர்வேட்டிவ் கட்சிக்குப் பெரும்பான்மை? -

டிச. 12 பிரித்தானிய தேர்தல் | கன்சர்வேட்டிவ் கட்சிக்குப் பெரும்பான்மை?

நவம்பர் 27, 2019

அடுத்த மாதம் (டிசம்பர் 12) நடக்கவிருக்கும் பிரித்தானிய பொதுத் தேர்தலில் பொறிஸ் ஜோன்சனின் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றிபெறுமெனக் கருத்துக் கணிப்பொன்று கூறுகிறது.

ஜோன்சன், கோர்பின் விவாதம்

650 ஆசனங்களைக் கொண்ட பொதுச் சபையில் கன்சர்வேட்டிவ் கட்சி 359 ஆசனங்களையும், தொழிற்கட்சி 211 ஆசனங்களையும் பெறுமென ‘யூகவ் எம்.ஆர்.பி. போலிங்’ (YouGov MRP Polling) எந்னும் கருத்துக் கணிப்பு நிறுவனம் தன் தரவாய்வு மூலம் எதிர்வு கூறியிருக்கிறது. 2017 ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தல் முடிவுகளையும் இந் நிறுவனம் சரியாக எதிர்வுகூறியிருந்தது.

டென்னிஸ் ஸ்கின்னெர், ரொம் வட்சன் தொகுதிகளுட்பட்ட 44 தொகுதிகளில் தொழிற்கட்சி இந்த தடவை தோல்வியுறுமென அக்கருத்துக் கணிப்பு மேலும் தெரிவிக்கிறது.

100,000 வாக்காளர்களிடம் பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு இக் கருத்துக் கணிப்புத் தயாரிக்கப்பட்டது.

வடக்கு இங்கிலாந்து, மிட்லாண்ட் போன்ற பிரதேசங்களில் தொழிற்கட்சியின் இழப்பு அதிகமாகவிருக்குமெனவும், ஸ்கொட்லாந்தில் தொழிற்கட்சி பல ஆசனங்களை ஸ்கொட்டிஷ் தேசியக் கட்சிக்கு இழக்கலாமெனவும் ‘யூகவ்’ எதிர்வுகூறுகிறது.

சமீபத்தில் கன்சர்வேட்டிவ் கட்சியிலிருந்து லிபரல் டெமோக்கிறட்டிக் கட்சிக்குத் தாவிய எவரும் வெற்றிபெறும் சாத்தியமில்லை எனவும் அக் கருத்துக்கணிப்புத் தெரிவிக்கிறது.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  பிரித்தானியா | அறுதிப் பெரும்பான்மையுடன் பொறிஸ் ஜோன்சன் வெற்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)