Sri Lanka

டக்ளஸ் தேவானந்தாவுக்கு கடற்தொழில் அமைச்சு – புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் எடுத்தது


வியாளேந்திரன், தொண்டமானுக்கு ராஜாங்க அமைச்சுகள்

ஆகஸ்ட் 12, 2020: கண்டி அரண்மனை மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவை மற்றும் ராஜாங்க அமைச்சரவையின் பதவிப் பிரமாணம் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச முன்னிலையில், சற்று முன்னர் முடிவடைந்தது.

தமிழர் தரப்பில் அமைச்சரவை அந்தஸ்துடனான, கடற்தொழில் அமைச்சு டக்ளஸ் தேவாநந்தாவிற்குக் கிடைத்திருக்கிறது.

முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த அலி சப்ரிக்கு நீதி அமைச்சு போகிறது.

ராஜபக்ச குடும்பத்தில், கோதாபய (பாதுகாப்பு), மஹிந்த (நிதி, புத்தசாசன, கலாச்சார, வீடமைப்பு), சாமல் (நீர்ப்பாசனம்), நாமல் (இளைஞர், விளையாட்டுத்துறை) ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள் போகின்றன. ஷவீந்திர (ராஜாங்க அமைச்சு) கிடைத்திருக்கிறது.

ராஜாங்க அமைச்சுப் பதவிகளில், சதாசிவம் வியாழேந்திரன் (தபால் சேவைகள்), ஜீவன் தொண்டமான் (தோட்ட, வீடமைப்பு) ஆகியோருக்குக் கிடைத்திருக்கிறது.


அமைச்சு நியமனங்கள் – முழு விபரம்

அமைச்சரவை அந்தஸ்துள்ள (cabinet) அமைச்சர்கள்

பெயர்அமைச்சு
கோதாபய ராஜபக்ச பாதுகாப்பு
மஹிந்த ராஜபக்சபுத்த சாசனம், மதம், கலாச்சாரம்
கெஹெலிய ரம்புக்வெலஊடகம்
அலி சப்ரிநீதி
தினேஷ் குணவர்த்தனவெளி விவகாரம்
ஜனக பண்டார தென்னக்கோன்பொதுச் சேவைகள், மாகாணம், உள்ளூராட்சி
ஜி.எல்.பீரிஸ்கல்வி
பவித்ரா வன்னியாராச்சி சுகாதாரம்
நிமால் சிறிபால டி சில்வாதொழில்
மஹிந்த அமரவீரசுற்றாடல்
R.M.C.B. ரத்னாயக்காவன சீவராசிகள், வன பாதுகாப்பு
மஹிந்தானந்த அளுத்கமகே விவசாயம்
சமால் ராஜபக்சநீர்ப்பாசனம்
எஸ்.எம்.சந்திரசேனகாணி
டக்ளஸ் தேவாநந்தாமீன்பிடி
ரமேஷ் பத்தரானபெருந்தோட்டம்
வாசுதேவ நாணயக்காரநீர் வழங்கல்
டலஸ் அழகப்பெருமாமின்சக்தி
உதய கம்மன்பிலவலுச் சக்தி
ரோஹித அபயகுணவர்த்தனதுறைமுகம், கப்பல்துறை
ஜோன்ஸ்ரன் பெர்ணாண்டோநெடுஞ்சாலைகள்
காமினி லொக்குகே போக்குவரத்து
நாமல் ராஜபக்சஇளைஞர், விளையாட்டு
பிரசன்னா ரணதுங்கசுற்றுலா
பந்துல குணவர்த்தனாவர்த்தகம்
விமல் வீரவன்ச கைத்தொழில்


ராஜாங்க அமைச்சர்கள்

பெயர்அமைச்சு
சமால் ராஜபக்சஉள்ளக பாதுகாப்பு, உள்விவகாரம், அனர்த்த நிர்வாகம்
பிரியங்கார ஜயரட்ணவெளிநாட்டு வேலைவாய்ப்பு, சந்தை விரிவாக்கம்
துமிந்த திசநாயக்காமாற்று வழி மின்னுற்பத்தித் திட்டங்கள்
தயாசிறி ஜயசேகரஉள்ளூர் துணியுற்பத்தி
லசந்த அழகியவண்ணகூட்டுறவு, சந்தை அபிவிருத்தி, நுகர்வோர் பாதுகாப்பு
சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளேசிறைச்சாலை சீர்திருத்தம், சிறைவாசிகள் புனர்வாழ்வு
அருந்திகா பெர்ணாண்டோதென்னை, கித்துள், பனை, ரப்பர் அபிவிருத்தி
நிமால் லான்சாகிராமியத் தெருக்கள், உட்கட்டுமானம்
ஜயந்த சமரவீரதுறைமுக கிட்டங்கி, வழங்கல் சேவைகள்
றொஷான் ரணசிங்ககாணி நிர்வாகம், வீடமைப்பு
கனகா ஹேரத்தேயிலை உற்பத்தி, ஏற்றுமதி விவகாரம்
விதுர விக்கிரமநாயக்கதேசிய பாரம்பரியக் கலைகள், கிராமியக் கலைகள் முன்னெடுப்பு
ஜனக வக்கும்புரசிறு தோட்டத் தொழில் அபிவிருத்தி, ஏற்றுமதி
விஜித பேருகொடபிக்கு கல்வி, பெளத்த பல்கலைக்கழகம்
ஷேஹான் சேமசிங்கசமுர்த்தி, நுண்கடன், சுய தொழில் அபிவிருத்தி
மோஹன் டி சில்வாஉரம் வழங்கல், பாவனை, பூச்சியழிப்பு கட்டுப்பாடு
லோஹன் ரத்வத்தரத்தினக்கல், நகைத் தொழில்
திலும் அமுனுகமவாகனக் கட்டுப்பாடு, போக்குவரத்துச் சேவைகள்
விமலவீர திசநாயக்காவனராசிகள், வன பாதுகாப்பு
தாரக பாலசூரியாபிராந்திய ஒத்துழைப்பு விவகாரம்
இந்திகா அனுருத்தகிராமிய வீடமைப்பு, கட்டிடப் பொருள்
காஞ்சனா விஜேசேகரமீன்பிடித் துறைமுக அபிவிருத்தி, மீன் வளர்ப்பு, ஏற்றுமதி
சனத் நிஷாந்தகிராமிய குடிநீர் வழங்கல்
சிறீபால கம்லாத்மஹாவலி அபிவிருத்தி
சரத் வீரசேகரமாகாண, உள்ளூராட்சி சபை விவகாரம்
அனுரத்த ஜயரட்ணகிராமிய வயல்கள், குளங்கள் அபிவிருத்தி
சதாசிவம் வியாளேந்திரன்தபால் சேவைகள், ஊடக அபிவிருத்தி
தேனுகா விதானகமகேகிராமிய பாடசாலை அபிவிருத்தி
சிசிர ஜயக்கொடிஆயுர்வேத மருத்துவம், கிராமிய மருத்துவ அபிவிருத்தி
பியல் நிஷாந்த டி சில்வாபெண்கள், குழந்தைகள் அபிவிருத்தி, முன்பள்ளி விவகாரம்
பிரசன்னா ரணவீரகிராமிய தொழில் அபிவிருத்தி
டி.வி.சனகாவிமானத்துறை, ஏற்றுமதி வர்த்தக வலய அபிவிருத்தி
டி.பி.ஹேரத்கால்நடை, பண்ணை தொழில்கள் விவகாரம்
சஷிந்திரா ராஜபக்சமரக்கறி விவசாய் அபைவிருத்தி
நாளகா கொடவேகநகர அபிவிருத்தி, தோட்டி தொழில் முகாமைத்துவம்
ஜீவன் தொண்டமான்தோட்ட வீடமைப்பு, உட்கட்டுமானம்
அஜித் நிவார்ட் கப்ரால்நிதி, முதலீட்டுச் சந்தை
சீதா ஏரம்பபொலதொழிற் கல்வி, தொழில் முயற்சி ஊக்குவிப்பு
சன்னா ஜயசுமணமருந்து உற்பத்தி, வழங்கல், கட்டுப்பாடு