ஞானசார தேரரின் செயலணி அதிகாரம் மீளப்பெறப்பட்டது


‘ஒரு நாடு ஒரு சட்டம்’ சட்ட வரைவை உருவாக்குவதற்கு ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கவெனெ ஞானசார தேரரின் தலைமையில் நிய்லமிக்கப்பட்ட செயலணியின் அதிகாரத்தை ஜனாதிபதி மீளப் பெற்றுள்ளார். இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் நவம்பர் 06, 2021 அன்று வெளியிடப்பட்டது.

அக்டோபர் 26, 2021 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, ‘ஒரு நாடு, ஒரு சட்டம்’ சட்டமூலத்தை உருவாக்கும் பணியை ஜநாதிபதி இச் செயலணிக்கு வழங்கியிருந்தார். இச் சட்டமூலத்தையும் உள்ளடக்கிய புதிய அரசியலமைப்பின் வரைவை நீதி அமைச்சர் அலி சப்றி தயாரித்துவரும் வேளையில் அவருக்குத் தெரியாமல் ஜனாதிபதி இச் செயலணியை அறிவித்திருந்தார். அத்தோடு ஞானசாரரின் தலைமையிலான இச் செயலணிக்குப் மனைத உரிமை அமைப்புகள் உள்ளிட்டுப் பல தரப்பினரிடமிருந்தும் பலத்த எதிர்ப்பும் கிளம்பியிருந்தது. இச் செயலணி பற்றிய அறிவிப்பினால் அதிருப்தியடைந்த அமைச்சர் சப்றி ஜனாதிபதி நாடு திரும்பியதும் தனது பதவி விலகல் கடிதத்தைச் சமர்ப்பித்திருந்தார். இருப்பினும், ஜனாதிபதி அக் கடிதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இந் நிலையில் இப்போது அச் செயலணியின் அதிகாரத்தை மீளப் பெறுவதாக ஜனாதிபதி அறிவித்திருக்கிறார்.