World

ஜோர்ஜ் ஃபுளோய்ட் | ஜோர்ஜியா மாணவர்கள் மீது பொலிஸ் ரேசர் தாக்குதல்

6 பொலிசார் மீது வழக்குத் தாக்கல்

ஜோர்ஜ் ஃபுளோய்ட் கொலை தொடர்பாக அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது வாகனம் ஒன்றில் வந்த நான்கு கறுப்பின மாணவர்கள் பொலாசாரினால் தாக்கப்பட்டிருந்தனர்.

இச் சம்பவம் தொடர்பாக ஆறு பொலிசார் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது என ஃபுல்ரன் கவுண்டி மாவட்ட அட்டோர்ணி போல் ஹவார்ட் அறிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர் வீதிகளில் நிறைந்திருந்ததனால் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்திருந்த நிலையில், இந் நால்வர் சென்றுகொண்டிருந்த வாகனம் நிறுத்தப்பட்டு அதிலிருந்த இருவரைப் பொலிசார்பலவந்தமாக வெளியில் இழுத்து அவர்கள் மீது ஸ்டன் துப்பாக்கியால் சுட்டனர். இச் சம்பவம் பற்றிய காணொளி பல சமூகவலைத்தளங்கள் மூலம் உலகம் முழுவதும் பரவி வருகிறது.



இச் சம்பவத்தின் போது இரண்டு பொலிசார் ரேசர் பாவிப்பது அவர்களுடைய சொந்த உடற் கமராவில் பதிந்துள்ளது. அதே வேளை மற்றைய பொலிசார் தமது கமராக்களையும், பாட்ஜ்களையும் கைகளால் மறைப்பதும் காணொளியில் பதிவாகியுள்ளது.

இந்த இரண்டு பொலிசாரும் அட்லாண்டா நகர மேயர் கெய்ஷா பொட்டம்ஸ் மற்றும் பொலிஸ் தலைவர் எரிக்கா ஷீல்ட்ஸ் ஆகியோரின் தலையீட்டினால் ஞாயிற்றுக் கிழமையே பதவி நீக்கம் செய்யப்பட்டுவிட்டனர். உடற் கமராவின் சான்றுகள் இதற்குப் போதுமானதாகவிருந்தது. ஏனைய நான்கு பொலிசார் மீதும் இன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரேசர் செய்யப்பட்ட ஒரு மாணவர் மீது பொலிசாரிடமிருந்து தப்பியோட முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. இருப்பினும் அதை நீக்கிவிடும்படி மேயர் பொட்டம்ஸ் உத்தரவிட்டுள்ளார்.

இதே வேளை அமெரிக்காவில் பல நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்த வண்ணமுள்ளன. ஆர்ப்பாட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த இராணுவத்தைப் பாவிப்பேந் என ஜனாதிபதி ட்றம்ப் எச்சரித்துள்ளார்.