World

ஜேர்மனி | இராணுவத்திற்குக் குண்டு வைத்ததாக அகதி கோரிக்கையில் ஒப்புக்கொண்டவருக்கு எதிராக வழக்கு!


ஜேர்மனியில் புகலிடம் கோரும் ஒருவர் தான் இராணுவத்தினருக்குக் குண்டுவைத்ததாக ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுத்தமை தொடர்பாக அவர் மீது அந்நாடு வழக்குத் தொடர்ந்திருந்தது.

ஜேர்மனியின் டுசுல்டோர்ஃப் நகரில் நடைபெறவிருக்கும் இழ் வழக்கில் விடுதலைப் புலியெனச் சந்தேகப்படும் ஒருவர் தனது புகலிடக் கோரிக்கையின்போது கொடுத்த வாக்குமூலத்தின்போது இலங்கையிலிருந்தபோது, இராணுவ வாகனமொன்றிற்கு தான் குண்டுவைத்ததாகவும் அச் சம்பவத்தின்போது 6 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், அப்போது தனக்குப் பதின்ம வயது எனவும் கூறியிருந்தார்.

2018 இல் அவர் அளித்த வாக்குமூலத்தின் பிரகாரம் அவர் மீது ஜேர்மன் பொலிசார் தொடுத்த வழக்கு இப்போது நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் குற்றவாளியெனக் காணப்பட்டால் அவருக்கு அதியுச்சம் 10 வருடங்கள் சிறைத்தண்டனை கிடைக்கலாம் எனக் தெரியவருகிறது.