ஜெய்லர் சாதனை: விரைவாக வருவாய் தேடித்தந்த இரண்டாவது தமிழ் படம்
12 நாட்களில் உலக வருமானம், இதுவரை, ரூ 550 கோடி!
ரஜினிகாந்த் நடித்து சமீபத்தில் வெளிவந்த ஜெய்லர் படம் உலக வசூல் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. வெளிவந்து 12 நாட்களில் உலக வருமானமாக அது பெற்ற ரூ 550 கோடியின் மூலம் அதிவிரைவாக வருமானமீட்டிய இரண்டாவது தமிழ்ப்படம் என்ற சாதனையை ஈட்டியிருக்கிறது. சங்கரின் இயக்கத்தில் 20218 இல் வெளியான 2.0 என்ற படம் எட்டே நாட்களில் இத் தொகையை ஈட்டியதன் மூலம் சாதனையில் முதலிடத்தில் இருக்கிறது.
நெல்சன் திலிப்குமாரின் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தில் ரஜினியுடன் தமன்னா, மோஹன்லால், விநாயகன், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, சிவா ராஜ்குமார், ஜாக்கி ஷ்றொஃப் ஆகியோர் நடித்திருந்தனர். தமிழி தயாரிக்கப்பட்டு இந்தி, தெலுங்கு, மலயாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் ‘ட்ப்’ செய்யப்பட்டிருந்தது. அனிருத் ரவிசந்தர் இப்படத்துக்கு இசையமைதிருக்கிறார்.