ஜெயலலிதாவின் கதை 'தலைவி' படமாகிறது | MGR ஆக அரவிந்தசாமி -

ஜெயலலிதாவின் கதை ‘தலைவி’ படமாகிறது | MGR ஆக அரவிந்தசாமி

அரவிந்த் சுவாமி

முன்னாள் நடிகையும், தமிழ்நாடு முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதாவின் கதை ‘தலைவி’ என்ற பெயரில் படமாகிறது (biopic). ஏ.எல்.விஜே யின் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா றனோட் டும் எம்.ஜி.ராமச்சந்திரனாக அரவிந் சுவாமியும் நடிக்கிறார்கள்.

இப் படத்திற்காக அரவிந்த் சுவாமி தன் தோற்றத்தில் நிறைய மாற்றங்களைச் செய்யவேண்டி வந்துள்ளது. ‘கடல்’ படத்தின் மூலம் திரையுலகுக்குத் திரும்பி வந்த நாளிலிருந்து அவர் ஒரே தோற்றத்தில் தான் தோன்றி வந்தார்.

இப் படத்தில் நடிப்பதற்காக அவர் எம்.ஜி.ஆரைப் போல முகத்தைச் சவரம் செய்யவேண்டி ஏற்பட்டது.

நவம்பர் 10 அன்று படப்பிடிப்பு ஆரம்பமானது. இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் இப் படம் தயாரிக்கப்படுகிறது.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  திரை விமர்சனம் | சங்கத் தமிழன்
error

Enjoy this blog? Please spread the word :)