ஜெனரல் சில்வா பயங்கரவாதத்தை ஒழிக்க வீரசாதுரியத்துடன் போராடியவர் – சஜித் புகழாரம்!

Spread the love

பெப்ரவரி 16, 2020

” மேஜர் ஜெனெரல் ஷவேந்திர சில்வா அமெரிக்காவுள் நுழையும் அனுமதி மறுக்கப்பட்ட விடயம் துரதிர்ஷ்டவசமானதும், வருந்தத்தக்கதுமாகும்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சமூக வலைத் தளங்களின்மூலம் அவர் வெளியிட்ட அறிக்கையில் ” மேஜர் ஜெனெரல் ஷவேந்திர சில்வா, பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக போர்முனையில் வீரசாதுரியத்துடன் செயற்பட்ட ஒருவர்” எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.

“இத் தேவையான தருணத்தில், நாமெல்லோரும் அவருடனும், அவரது குடும்பத்தாருடனும் பக்கத்தில் துணையாக இருக்கிறோம். 30 வருடங்களாக நடைபெற்ற பயங்கரவாதத்தை ஒழிப்பதில் பங்கேற்ற அத்தனை போர் வீரர்களுடனும் துணை நிற்பது ஒரு தேசமாக நாம் செய்ய வேண்டிய கடமை” என அவர் தனது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Print Friendly, PDF & Email
Related:  இலங்கை | பாராளுமன்றத் தேர்தல் காலவரையின்றி பின்போடப்பட்டது

Leave a Reply

>/center>