ஜூலை 6 இல் நிதி, பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகிறார் பசில் ராஜபக்ச

அமெரிக்காவிலிருந்து திரும்பிய பசில் ராஜபக்ச ஜூலை 6 இல் தேசியப் பட்டியல் உறுப்பினராகப் பாராளுமன்றம் செல்கிறார் எனவும், தொடர்ந்து அவர் நிதி மற்றும் பொறுளாதார அபிவிருத்தி அமைச்சரகாக நியமிக்கப்படவுள்ளார் எனவும் லந்காதீப செய்தி வெளியிட்டுள்ளது.

பபசில் ராஜபக்சவுக்கு இடம் தருவதற்காக, தேசியப் பட்டியல் உறுப்பினரான பேராசிரியர் ரஞ்சித் பண்டார தனது பாராளுமன்ற ஆசனத்தை விட்டுக் கொடுக்கவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவர் பதவியேற்று சத்தியப் பிரமாணம் எடுத்துக்கொண்டவுடன், பெற்றோல் விலை 5 முதல் 7 ரூபாய்களாலும், டீசல் 3 முதல் 5 ரூபாய்களாலும் குறைக்கப்படுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

2010-2015 ராஜபக்ச ஆட்சியின்போதும் பசில் ராஜபக்சவுக்கு இவ்வமைச்சுப் பதவியே வழங்கப்பட்டிருந்தது.

அமெரிக்க குடிவரவுக்கான பச்சை மட்டையை வைத்திருக்கும் பசில், அறிவிக்கப்படாத காரணங்களுக்காக திடீரென்று அமெரிக்கா சென்றிருந்து நேற்று (24) நாடு திரும்பியிருந்தார்.