• Post category:WORLD
  • Post published:January 4, 2021
Spread the love

அமெரிக்க இராணுவ இரகசியங்களைப் பகிரங்கப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் பிரித்தானியாவில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அவுஸ்திரேலிய ஊடகவியலாளரான ஜூலியன் அசாஞ்சின் நாடுகடத்தல் வழக்கு இன்று (திங்கள்) பிரித்தானிய நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

அவரை அமெரிக்காவுக்கு நாடுகடத்தும்படி அந்நாட்டினால் தொடரப்பட்ட வழக்கு மாவட்ட நீதிபதி வனெஸ்ஸா பறெயிட்சர் முன்னிலையில் ஓல்ட் பெயிலி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு இன்று காலை 10:00 மணி (பிரித்தானிய நேரம்) தீர்ப்பு வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

49 வயதுடைய ஜூலியன் அசாஞ், தொழில்நுட்பத்தைப் பாவித்து அமெரிக்க இணையத் தளங்களினூடு உட்புகுந்து அங்கு சேகரிக்கப்பட்டு வைக்கப்படிருந்த இராணுவ இரகசியங்களைத் திருடிப் பகிரங்கப்படுத்தினார் என்பது அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளில் ஒன்று. ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போர்களில் அமெரிக்க இராணுவத்தின் செயற்பாடுகள் போன்றவற்றையும், 2010 இல் அதுபற்றி மேற்கொள்ளப்பட்ட தகவல் தொடர்புகளையும் ஜூலியன் அசாஞ் தனது இணையத் தளமான ‘விக்கிலீக்ஸ்’ மூலம் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தார்.

அசாஞ்சுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கப்பட்டால் அத் தீர்ப்புக்கு எதிராகப் பெரும்பாலும் அவர் மேன்முறையீடு செய்வாரெனவும் அதனால் அவரது நாடு கடத்தல் பின்போடப்படுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சென்ற வருடம் பெப்ரவரி மாதம் ஆரம்பித்த அவரது வழக்கு அக்டோபரில் முடிவுக்கு வந்தது. இதந் தீர்ப்பு (இன்று) வழங்கப்படும்வரை அவர் தென் லண்டனிலுள்ள அதியுச்ச பாதுகாப்புடன்கூடிய பெல்மார்ஷ் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.



பாலியல் வல்லுறவு தொடர்பாக சுவீடன் நாட்டினால் பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணையிலிருந்து தப்புவதற்காக, 2012 இல் லண்டனிலுள்ள எக்குவாடோர் தூதரகத்தினால் அபயம் வழங்கப்பட்டிருந்தது. பின்னர் சுவீடன் தனது பிடியாணையை மீளப்பெற்றுக்கொண்டுவிட்டது. இதன் பிறகு, ஏப்ரல் 2019 இல் அமெரிக்க மாநிலமான வேர்ஜினிய நீதிமன்றம் கம்பியூட்டர் தகவற் திருட்டுக்காக அசாஞ் மீது வழக்குத் தொடுத்திருந்தது. மே 2019 இல் இராணுவ இரகசியங்களைப் பகிரங்கப்படுத்தியமைக்காக மேலு 17 வழக்குகளில் குற்றவாளியெனத் தீர்மானிக்கப்பட்டு அவரது நாடுகடத்தலை அமெரிக்கா கோரியிருந்தது.

அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்பட்டால், மேற்படி குற்றங்களுக்காக அவருக்கு 175 வருடங்கள்சிறைத்தண்டனை வழங்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய தீர்ப்பை எதிர்பார்த்து அசாஞ்சின் ஆதரவாளர்கள் நீதிமன்றத்திந் முன் கூடியுள்ளதாகவும், பிரபல அமெரிக்க மனித்க உரிமை செயற்பாட்டாளரான பேராசிரியர் நோம் சோம்ஸ்கி உட்படப், பல உலக மனித உரிமை அமைப்புகள், செயற்பாட்டாரகள் ஆகியோர் அசாஞ்சின் விடுதலைக்காகாக் குரல்கொடுத்து வருகிறார்கள். இன்றய தீர்ப்பு அசாஞ்சிற்கு எதிராக வழங்கப்படுமானால் பிரித்தானியா தனது சர்வதேச நியமங்களை மீறியமைக்காக அதன்மீது கடுமையான போராட்டம் முன்னெடுக்கப்படுமென மனிதவுரிமை அமைப்புகள் எச்சரித்துள்ளன.

ஜூலியன் அசாஞ் தண்டிக்கப்பட்டால், விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவல்களை மறுபிரசுரம் செய்தமைக்காக நியூ யோர்க் ரைம்ஸ் பத்திரிகை மீதும் வழக்குப் பதியப்பட வேண்டும் இஅதனால் அமெரிக்க பத்திரிகைச் சுதந்திரம் கேள்விக்குள்ளாக்கப்படும் என்ற காரணத்தால் பராக் ஒபாமா நிர்வாகம் அசாஞ் மீது நடவடிக்கை எடுக்க மறுத்திருந்தது.

Related:  பிந்திய செய்தி | ஜூலியன் அசாஞ் நாடுகடத்தல் தடுக்கப்பட்டது!

தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்றம்ப் தனது கடைசி நாட்களில் ஜூலியன் அசாஞ்சிற்குப் பொதுமன்னிப்பு வழங்கவேண்டுமென்று ட்றம்ப் ஆதரவாளரான சேரா பேலின் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர் துள்சி கிப்பார்ட் ஆகியோர் குரலெழுப்பி வருகின்றனர்.


Print Friendly, PDF & Email