ஜூன் 21, 2021 வரை கனடா-அமெரிக்க எல்லை திறக்கப்பட மாட்டாது – மத்திய அரசு

கோவிட் பெருந்தொற்றுக் காரணமாக மூடப்பட்டிருக்கும் கனடா-அமெரிக்க எல்லைப் பிரதேசத்தின் மீள் திறப்பு, எதிர்பார்த்திருந்ததைப் போல் இந்த வாரம் திறக்கப்படமாட்டாது எனவும், அதை ஜூன் 21 வரை நீடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது.

75% மான கனடியர்கள் தடுப்பூசிகளை எடுத்துவிட்டனர் என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே எல்லைகள் திறக்கப்பட வேண்டுமெனக் கனடியர்கள் விரும்புகிறார்கள்

கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்றூடோ

கோவிட் கட்டுபாட்டு நடவடிக்கைகளில் ஒன்றாக, மார்ச் 21, 2020 முதல், இவ்விரு நாடுகளுக்குமிடையேயான எல்லைப் போக்குவரத்து, அவசியமற்ற தேவைகளுக்கு மூடப்பட்டிருந்தது. இருப்பினும், அவ்வப்போது நாடு தழுவிய ரீதியில் இருக்கும் தொற்று நிலைகளுக்கேற்றவாறு இப் போக்குவரத்து தடை மாதா மாதம் நீடிக்கப்பட்டு வந்தது. இதன் பிரகாரம் மே மாத்ம் 21 ம் திகதி எல்லை திறக்கப்படுமென எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் தொற்று நிலைமை இன்னும் முற்றாகச் சீராக வராமையால், இவ்வெல்லை மூடலை மேலும் ஒரு மாதத்தால், ஜூந் 21, 2021 வரை, நீடிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இவ்விரு நாடுகளுக்குமிடையேயான எல்லை மூடல் தற்போது 14 மாதங்களாக நடைமுறையில் இருந்துவருகிறது.

எல்லை மூடலின் முக்கிய அம்சங்கள்:

  • அமெரிக்காவிலிருந்து இன்னுமொரு மூன்றாவது நாட்டுக்குக் கனடாவினூடு பயணம் செய்யும் ஒருவர் (transit passenger), வெளியில் வராத பட்சத்தில், தொடர்ந்தும் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்
  • அமெரிக்காவிற்குப் பயணம் செய்ய விரும்பும் கனடியர்கள் விமான மூலம் மட்டும் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர். இப் பயணத்தின் நிபந்தனையாக, பயண நாலுக்கு மூந்று நாட்களுக்குள் கொறோணாவைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு நோய்த் தொற்றில்லை என அத்தாட்சிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
  • கனடாவுக்குப் பயணம் செய்ய விரும்பும் அமெரிக்கர்கள் எவ்வழிகளினாலும் அனுமதிக்கப்பட மாட்டார். விமான நிலையங்கள் மூலம் கனடாவுக்குள் வந்திறங்கும் எவரும் இதற்கான ஒடல்களில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுவர்.

இரு நாடுகளிலும் நோய்த் தொற்று போதுமான அளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டது என்று தெரியும்வரை எல்லை மூடல் தொடர்ந்தும் கடைப்பிடிக்கப்படுமென பொதுப் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். அதே வேளை “75% மான கனடியர்கள் தடுப்பூசிகளை எடுத்துவிட்டனர் என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே எல்லைகள் திறக்கப்பட வேண்டுமெனக் கனடியர்கள் விரும்புகிறார்கள்” என கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்றூடோ தெரிவிதிருக்கிறார்.