ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி விசேட விருந்தாளி

Spread the love

ஆகஸ்ட் 25, 2019

ஜி7 (G7) எனப்படும் 7 பொருளாதாரப் பலம் வாய்ந்த நாடுகளின் சந்திப்பு நாளை திங்களன்று பிரான்ஸில் நடைபெறுகிறது. ஐக்கிய இராச்சியம், கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். இந்தியா இந்த வட்டத்தில் இல்லை எனினும், பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவேல் மக்றோனின் அழைப்பில், பிரதமர் மோடி இதில் விசேட விருந்தாளியாகக் கலந்து கொள்கிறார்.

இரு தலைவர்களுக்குமிடையேயுள்ள தனிப்பட்ட நட்பு மற்றும் இந்தியாவின் பொருளாதார வலு போன்ற காரணங்களினாலேயே பிரதமர் மோடி அழைக்கப்பட்டார் என இந்திய வெளிவிவகார அமைச்சு கூறுகிறது. இன்று (ஞாயிறு) பிரதமர் பிரான்ஸ் சென்றடைந்தார்.

ஐ.நா. செயலாளர் நாயகம் அன்ரோனியோ குடேறேஸ், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோரையும் பிரதமர் அங்கு சந்திக்கவிருக்கிறார்.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சந்திப்பின்போது பிரதமர் மோடி இரு தரப்பு வர்த்தகம் பற்றி மட்டுமல்லாது காஷ்மீர் விவகாரத்தில் 370 கட்டளையில் உள்ள சில அம்சங்களை நீக்குவது தொடர்பாகவும் கலந்துரையாடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியப் பிரதமர் மோடியைச் சந்திக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஆவலாயுள்ளார் எனவும் பாதுகாப்பு, பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் வர்த்தகம் தொடர்பாக அவர்கள் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியா தனது இறக்குமதித் தீர்வையைக் குறைத்து சந்தையை விரிவாக்கவேண்டுமென்பதே அமெரிக்காவின் எதிர்பார்ப்பு.

ஜி7 உச்சிமாநாட்டின் இன்றய இரண்டு நிகழ்வுகளின் போது பல்லுயிர்ப் பெருக்கம் (Biodiversity), காலநிலை (Climate), சமுத்திரங்கள் (Oceans) ஆதியன பற்றித் தலைவர்கள் கலந்தாலோசிப்பர் எனவும் அதில் பிரதமரும் கலந்துகொள்வார் எனவும் அறியப்படுகிறது.

Print Friendly, PDF & Email
Related:  கொரோனாவைரஸைத் துரத்த கோமூத்திரமருந்தும் அகில இந்திய இந்துமகாசபையினர்

Leave a Reply

>/center>