ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் மீளப்பெறமாட்டாது – இலங்கை திண்ணம்
ஐரோப்பிய ஒன்றியத்தின் கரிசனைகுட்பட்ட மனித உரிமைகள் தொடர்பான சில விடயங்கள் மீது இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டதனால் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை ஒன்றியம் மீளப்பெறமாட்டாது எனத் தான் நம்புவதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பண்டங்கள்குக்கான இந்த வர்சிசலுகை மூலம் வருடமொன்றுக்கு $500 மில்லியன் அமெரிக்க டாலர்களைச் இலங்கை சேமிக்கிறது. ஆனால் இச்சலுகையைப் பெறுவதற்கு இலங்கை 27 சர்வதேச உடன்படிக்கைகளை அனுசரிக்கும் ஒன்றாக இருக்கவேண்டுமென்பது நிபந்தனை. அதில் மனித உரிமைகளும் ஒன்று. மநித உரிமைகள் மீறல் காரணமாக 2010 இல் இலங்கை இச் சலுகையை இழந்திருந்ததெனினும் 2016இல், நல்லாட்சிக் காலத்தின்போது இச் சலுகை மீளப்பெறப்பட்டிருந்தது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் மறைந்த அமைச்சர் மங்கள சமரவீர ஆவார். கோதாபய ஆட்சிக்கு வந்த பின்னர் மனித உரிமைகள் விடயத்தில் இலங்கை மீண்டும் மீறல்களை மேற்கொண்டுவரும் காரணத்தால் இந்த வருடம் இச் சலுகையை ஒன்றியம் வழங்குவதற்கு சில நிபந்தனைகளை விதித்து கால அவகாசத்தையும் கொடுத்திருந்தது. பயங்கரவாதத் தடைச்சட்டத் திருத்தம் / அகற்றல் அதில் ஒரு நிபந்தனையாகும்.
இருப்பினும் இலங்கை இந் நிபந்தனைகள் மீது திருப்திகரமான நடவடிக்கைகளை எடுக்காமையால் ஒன்றியம் இச் சலுகையை மீளப்பெற்மென எதிர்பார்க்கப்பட்டது. இதே வேளை இலங்கையின் பணப் போதாமையால் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்கள் இறக்குமதிமீது இலங்கை தற்காலிக தடைகளை விதித்திருந்தது. ஐரோப்பிய ஒன்றியம் தற்போது விதித்துள்ள நிபந்தனைகளில் இவ்விறக்குமதி மீதான தடையை நீக்குவதும் ஒன்றாகும். இந்தியாவின் கடனுதவி சரிவரும் பட்சத்தில் இலங்கை ஒன்றியத்தின் இந்த இறக்குமதியை நடைமுறைப்படுத்தலாம். இதன் காரணமாக ஒன்றியம் ‘மனித உரிமைகள்’ மீதான நிபந்தனையைக் கைவிட்டு ஜி.எஸ்.பி. சலுகையை அனுமதிக்க வாய்ப்புண்டு எனக் கருதப்படுகிறது.
இவ் வேளையில் ” ஐரோப்பிய ஒன்றியத்தின் கேள்விகளுக்கு நாங்கள் நம்பிக்கையானதும், உண்மைத்தன்மையுள்ளதுமான காரணங்களை வழங்கியிருப்பதால் ஒன்றியம் இந்த வரிச் சலுகையை மீளப்பெறுமென்ற நம்பிக்கை தமக்கு இல்லை” என கொலம்பகே தெரிவித்துள்ளார்.
“ஒன்றியத்தின் முக்கியமானதொரு விடயம் பயங்கரவாதத் தடைச்சட்டம். அதன் மீதான திருத்தங்களை நாம் செய்திருக்கிறோம். மார்ச் மாதம் 8 அல்லது 9 ஆம் திகதிகளில் அது பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு விரைவில் சட்டமாக்கப்படவுள்ளது. இது எம்மால் எடுக்கப்பட்ட காத்திரமானதொரு நடவடிக்கை. தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் பற்றிய ஒன்றியத்தின் கரிசனை இன்னுமொரு விடயம். இதுவரை 81 கைதிகளை நாம் விடுதலை செய்திருக்கிறோம். மேலும் பலரை நாம் விடுதலை செய்யவுள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், எதிர்வரும் மனித உரிமைகள் சபை அமர்விற்கு முன்னர் அங்கத்துவ நாடுகளின் கண்களில் மண்ணைத் தூவும் விளையாட்டே இது என அரசை விமர்சிப்பவர்கள் கருதுகின்றனர். ஜி.எஸ்.ப். பிளஸ் வர்சிசலுகை மீளப்பெறப்பட்டுவிட்டால் தற்போதுள்ள நிலையில் அது இலங்கைக்கு பேரிடியாகவே இருக்கும். மீனவர், ஆடைத் தொழிலாளர், விவசாயிகள் ஆகியோர் இதனால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.