Entertainment

‘ஜல்லிக்கட்டு’ ஒஸ்காருக்குத் தெரிவாகவில்லை!


93 வது ஒஸ்கார் விருது விழாவில், 2021 ஆம் ஆண்டின் சிறந்த சர்வதேச திரைப்படத்துக்கான போட்டி வரிசையில் நின்ற மலையாள மொழிப்படமான ‘ஜல்லிக்கட்டு’ இவ்விருதுக்காகத் தேர்வாகவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

93 நாடுகளிலிருந்து இவ் விருதுக்காகப் படங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இவற்றில் இந்தியாவின் சார்பாக சமர்ப்பிக்கப்பட்டிருந்த ‘ஜல்லிக்கட்டு’ போட்டிக்கான குறும் பட்டியலில் இடம்பெறத் தவறிவிட்டது. இப்பட்டியல் இடம்பெற்றுள்ள இதர படங்கள்:

  • Bosnia and Herzegovina – “Quo Vadis, Aida?”
  • Chile – “The Mole Agent”
  • Czech Republic – “Charlatan”
  • Denmark – “Another Round”
  • France – “Two of Us”
  • Guatemala – “La Llorona”
  • Hong Kong – “Better Days”
  • Iran – “Sun Children”
  • Ivory Coast – “Night of the Kings”
  • Mexico – “I’m No Longer Here”
  • Norway – “Hope”
  • Romania – “Collective”
  • Russia – “Dear Comrades!”
  • Taiwan – “A Sun”

இநத 15 படங்களும், மார்ச் 5-9 வரை நடைபெறும் முதலாம் கட்ட உத்தியோகபூர்வ வாக்கெடுப்பிறகு அனுப்பி வைக்கப்படும். மார்ச் 15 அன்று தேர்வு செய்யப்பட்டு , ஏப்ரல் 25 அன்று நடைபெறும் விழாவில் அறிவிக்கப்படும்.

பிரபல மலையாள இயக்குனர் லிஜோ ஹோசே பெல்லிசெரியின் இயக்கத்தில் உருவான ஜல்லிக்கட்டு 2019 இல் வெளிவந்தது. எஸ்,ஹரீஷ், ஆர்.ஜெயகுமார் ஆகியோர் இப் படத்திற்கு வசனங்களை எழுதியிருந்தார்கள். ஹரீஷின் சிறுகதையான ‘மாவோயிஸ்ட்’ என்னும் கதையைத் தழுவி எடுக்கப்பட்டது இப்படம். அன்ரொனி வார்கீஸ், செம்பன் வினோத் ஹோசே, சாபுமோன் அப்டுசமாட், சாந்தி பாலச்சந்திரன் ஆகியோர் இதில் நடிக்கிறார்கள்.