ஜனாதிபதி வேட்பாளராக ஷிராந்தி ராஜபக்ச?

Spread the love

அமெரிக்க குடியுரிமையைத் துறந்துவிட்டேனென்று கோதபாய ராஜபக்ச நிரூபிக்கத் தவறும் பட்சத்தில் அவரின் இடத்துக்கு மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி ராஜபக்சவை நியமிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கா கூறியிர்ப்பதாகக் கொழும்பிலிருந்து வெளிவரும் டெய்லி மிரர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

“கோதபாய ராஜபக்சவின் அமெரிக்கக் குடியுரிமை பற்றித் தான் அமெரிக்க தூதுவராலயத்திற்கு மூன்று கடிதங்களை எழுதியிருந்ததாகவும் அதற்கு அவருக்குக் கிடைத்த மறுமொழி ” நாங்கள் அவ்விடயத்தில் இன்னும் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்” என்பதே” எனவும் இறுதியாக வந்த அமெரிக்க அறிக்கையில் கோதபாயவின் பெயர் இருக்கவில்லை எனவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தன்னைப் பொறுத்த வரையில், ஐ.தே.கட்சி முன்நிறுத்தும் எந்தவொரு வேபாளரையும் தான் ஆதரிப்பேன் என்றும் அவர் கூறியதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

>/center>