ஜனாதிபதி முன்னால் தலை கவிழ்ந்த 20A எதிர்ப்பாளர்கள் – திருத்தம் நிறைவேறுவது உறுதி!
20வது திருத்தம் நிறைவேறுவது திண்ணம்

ஜனாதிபதி முன்னால் தலை கவிழ்ந்த 20A எதிர்ப்பாளர்கள் – திருத்தம் நிறைவேறுவது உறுதி!

Spread the love

20வது திருத்தம், மூன்றில் இரணு பெரும்பான்மையுடன் நிறைவேறுவது உறுதியாகிவிட்டது. இரண்டு நாட்களுக்குமுன் அலரி மாளிகையில் இத் திருத்தத்துக்கு எதிராகப் பொங்கியெழுந்த ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதி ராஜபக்சவைக் கண்டதும் தமது எதிர்ப்புக்களை மீளப்பெற்றுக்கொண்டார்கள் எனக் கூறப்படுகிறது.

20வது திருத்தம் பாராளுமன்றத்தில் அமைச்சர் அலி சப்றியினால் சமர்ப்பிக்கப்பட்டபோது அகல உறுப்பினர்களுக்கும் இத் திருத்த வரைவு பற்றி அபிப்பிராயங்களைச் சொல்ல இடமளிக்கப்பட்டது. அப்போது பலர் தமது எதிர்ப்புக்களைக் காட்டிக் கூறிய கருத்துக்கள் பதிவேட்டில் இடம்பெற்றுள்ளன.

இதற்குப் பதிலளித்து ஜனாதிபதி ராஜபக்ச பேசும்போது, தான் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்றும், இத் திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை தனக்கு உண்டென்றும், உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட திருத்தங்கள மட்டுமே உள்வாங்கப்படும் எனவும் மிகவும் காட்டமாகத் தெரிவித்தார் என அறியப்படுகிறது.ஜநாதிபதியின் இந்த கடுமையான போக்கினால், அமைச்சர்கள் விமல் வீரவன்ச, பிறேம்நாத் டொலவத்த ஆகியோர் தமது எதிர்ப்புக்களை விடுத்து, திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களிக்கத் தயாராகவுள்ளார்கள் எனத் தெரிகிறது.

றிஷாட் பதியுதீனின் விடயத்தில், மூந்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற அவரது ஆதரவு என்றைக்குமே கோரப்படமாட்டாது என்ற உத்தரவாதத்தை ஜனாதிபதி கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.

Print Friendly, PDF & Email