ஜனாதிபதி மாளிகை, செயலகம் ஆர்ப்பாட்டக்காரர் கைகளில் – ஜனாதிபதி மாயம்!
பாதுகாப்பு படையினர் பின்வாங்கியதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர் ஜனாதிபதி மாளிகை மற்றும் செயலகத்துள் உள்நுழைந்துவிட்டார்கள் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.
நாட்டின் பல பாகங்களிலுமிருந்தும் கொழும்பு வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர் தற்போது ஜனாதிபதி மாவத்தைமூலம் ஜனாதிபதி மாளிகைக்குள் சென்றுகொண்டிருக்கிறார்கள். பாதுகாப்பு கருதி ஜனாதிபதி வேறிடத்துக்கு அகற்றப்பட்டு விட்டார். அதே வேளை ஜனாதிபதி மாளிகையில் தரித்து நிற்கும் நூற்றுக்கணக்கான சொகுசு வாகனங்களைக் காட்டும் காணொளி ஒன்றும் ஆர்ப்பாட்டக் காரர்களால் வெளியிடப்பட்டு வருகிறது. பல சொகுசு வாகனங்கள் மிக வேஅமாக கட்டுநாயக்கா விமான நிலையத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் காணொளியும் பிரபலமாகி வருகிறது. இன்னுமொரு காணொளி கோதாபய ராஜபக்ச கடற்படைக் கப்பலான கஜபாகுவில் ஏறுவது காட்டப்படுகிறது
இதே வேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவசர கட்சித்தலைவர்கள் கூட்டமொன்றுக்கு அழைப்பு விட்டிருப்பதாகவும் பாராளுமன்றத்தை உடனடியாகக் கூட்டும்படி சபாநாயகருக்கு அழைப்பு விட்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் பிரகாரம் இன்று பி.ப. 4:00 மணிக்கு பாராளுமன்றம்கூட்டப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.