ஜனாதிபதி, பிரதமர் ஜூலை 31, ஆகஸ்ட் 1 இல் யாழ் பயணம்?

ஜநாதிபதி கோதாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் இம் மாத முடிவில் யாழ்ப்பாணம் செல்லவுள்ளார்கள் எனத் தெரியவந்துள்ளது.

ஜனாதிபதி ராஜபக்ச தேர்தலில் வெற்றிபெற்றதிலிருந்து, யாழ் செல்வது இதுவே முதல் தடவையாகும்.

மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவிருந்தபோது 2013 இல் யாழ்ப்பாணம் செந்றிருந்தார். அப்போது கூட்டமைப்பு உட்படப் பல கட்சிகளைச் சார்ந்தவர்களும் அவருக்கு வரவேற்பு அளித்திருந்தனர்.