ஜனாதிபதி தேர்தல் | 5 மணிக்கு 80% மான வாக்குகள் பதிவு - பவ்றெல் -

ஜனாதிபதி தேர்தல் | 5 மணிக்கு 80% மான வாக்குகள் பதிவு – பவ்றெல்

நவம்பர் 16, 2019 – இலங்கை நேரம் மாலை 5:22 மணி


இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான நாடெங்கிலும் நடைபெற்ற வாக்களிப்பு மாலை 5:00 மணிக்கு நிறைவடைந்தது.

புத்தளத்தில் சில முஸ்லிம் வாக்களிக்கச் சென்ற பச் வண்டி சுடப்பட்டதாகவும், அதன் மீது கற்கள் வீசப்பட்டதாகவும் வந்த அசம்பாவிதத்தைத் தவிர பொதுவாக தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்ததாக அறிவிக்கப்படுகிறது.

150 க்கும் மேற்பட்ட வெளிநாட்டுத் தேர்தல் கண்காணிப்பாளர்களும் தேர்தல்களை அவதானித்து வந்தார்கள்.

சராசரியாக 80% வீதம் வாக்குப் பதிவுகள் நடைபெற்றிருப்பதாக ‘சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் அமைப்பின் (People’s Actions for Free and Fair Elections (PAFFREL)) நிறைவேற்றுப் பணிப்பாளர் றோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

மாலை 5:00 மணி வரை, மாவட்ட ரீதியாக வாக்களித்தோர் வீதம்:

 • நுவரேலியா-80%
 • கண்டி-80%
 • புத்தளம் -75%
 • பதுளை-80%
 • பொலனறுவை-80%
 • அனுராதபுரம்- 80%
 • அம்பாந்தோட்டை- 80%
 • இரத்தினபுரி 84%
 • கம்பஹா- 81%
 • யாழ்ப்பாணம்- 66%
 • கிளிநொச்சி- 73%
 • மட்டக்களப்பு-77%
 • அம்பாறை- 80%
 • கேகாலை- 79%
 • திருகோணமலை – 83%
 • மொனராகலை- 84%
 • களுத்துறை- 80%
 • முல்லைத்தீவு -76%
 • வவுனியா -75%
 • மன்னார்- 71%
 • கொழும்பு – 80%
 • மாத்தளை- 80%
 • காலி – 80%
 • மாத்தறை – 80%
 • குருநாகலை – 81%

தகவல் மூலம்: டெய்லி மிரர் (கொழும்பு)

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  கோத்தாபயவின் வெற்றியில் சிறுபான்மை இன மக்களின் பங்களிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)