ஜனாதிபதி தேர்தல் | பிரச்சாரம் இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது

ஜனாதிபதி தேர்தல் | பிரச்சாரம் இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது

Spread the love

நவம்பர் 13, 2019

இலங்கையின் 7 வது நிறைவேற்றுப் அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கான தேர்தலில் வேட்பாளர் மேற்கொள்ளும் பிரசாரப் பணிகள் இன்றிரவு 12:00 மணிக்கு முடிவடைந்துவிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நவம்பர் மாதம் 16ம் திகதி ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெறுமென வர்த்தமானி அறிவித்தல் மூலம் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன் பிரகாரம் அக்டோபர் 7 இல் 35 பேர் வேட்பாளர்களாகப் பதிவு செய்துள்ளனர்.

 • 15,992,096 பேர் வாக்களிக்கும் தகுதியுள்ளவர்கள்
 • 12,845 வாக்குச் சாவடிகள்
 • 659,030 தபாலில் வாக்களிக்கும் தகுதியுள்ளவர்கள் (அக்டோபர் 31-நவம்பர் 5)
 • 35 வேட்பாளர்கள்
 1. சஜித் பிரேமதாச – United National Party
 2. கோதபாய ராஜபக்ச – Sri lanka Podujana Peramuna
 3. அனுரகுமார திசநாயக்க – Janatha Vimukthi Peramuna
 4. மஹேஷ் சேனநாயக்க – National Peoples Party
 5. பததரமுல்ல சீலரத்ன தேரர் – Janasetha Peramuna
 6. அஜந்தா விஜேசிங்க – Socialist Party of Sri Lanka
 7. சமன் பிரசன்ன பெரேரா – Ape Janabala Paksaya
 8. ஆரியவன்ச திசநாயக்கா – Democratic United National Front
 9. சிறீதுங்க ஜயசூரியா – United Socialist Party
 10. பி.ஜி.நந்திமித்ர – New Samasamaja Party
 11. வஜ்ஜிரபாணி விஜேசிறிவர்த்தன – Socialist Equality Party
 12. சரத் மனமேந்திர – Nawa Sihala Urumaya
 13. றொஹான் பள்ளெவத்த – National Development Front
 14. ஏ.எஸ்.பி. லியனகே – Sri Lanka Labour Party
 15. துமிந்த நாகமுவ – Frontline Socialist Party
 16. அருணா டி சொய்சா – Democratic National Campaign
 17. அஜந்தா டி சொய்சா – Ruhunu Janatha Party
 18. பிரியந்த எதிரிசிங்க – Okkoma Wasiyo Okkoma Rajawaru Organization
 19. நமால் ராஜபக்ச – Jathika Samagi Peramuna
 20. சுப்பிரமணியம் குணரத்ன – Ape Jaithika Peramuna
 21. ஜயந்த கடகொட – independent
 22. சிறீபால அமரசிங்க – independent
 23. அபாரக்க புண்ணானந்த தேரர் – independent
 24. மிரோய் பெர்ணாண்டோ – independent
 25. சமன்சிறி ஹேரத் – independent
 26. விஜிதகுமார கீர்த்திரத்ன – independent
 27. சமிந்த அனுருத்த – independent
 28. சமரவீர வீரவன்னி – independent
 29. அஷோக வடிகமங்கவ – independent
 30. இட்றுஸ் மொஹாமெட் – independent
 31. பியசிறி விஜேனாயக்க – independent
 32. ரஜீவ விஜேசிங்க – independent
 33. எம்.கே.சிவாஜிலிங்கம் – independent
 34. எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா – independent
 35. ஹஸ்ஸா மொஹாமெட் அலெவி – independent

மூன்று பிரதான வேட்பாளர்களான சஜித் பிரேமதாச, கோதபாய ராஜபக்ச, அனுர குமார திசநாயக்க ஆகியவர்களைவிட முந்நாள் இராணுவ தளபதி மஹேஷ் சேனநாயக்கா மற்றும் ஜனசேத பெரமுன கட்சியைச் சேர்ந்த பததரமுல்ல சீலரத்தன தேரர் ஆகியவர்கள் ஓரளவு மக்கள் ஆதரவைப் பெற்றுள்ளார்கள் எனத் தெரியவருகிறது.

முன்னைய தேர்தலைகளைப் போலல்லாமல் இத் தேர்தல் பிரசாரங்களின்போது வன்முறைகளோ, குற்றச்செயல்களோ அதிகமாக இடம்பெறவில்லை எனவும் அதற்குக் காரணம் தேர்தல் ஆணையத்தின் மிக இறுக்கமான கட்டுப்பாடுகள் எனவும் கூறப்படுகிறது.

கட்டுப்பாடற்ற பதாகைகள், அறிவித்தல்கள், ஊர்வல ஊர்திகள், விளம்பரப் பலகைகள், கட்சி ஊர்வலங்கள் ஆகியவற்றுக்குத் தேர்தல் ஆணையம் தடைவிதித்திருந்தமையும் இதற்கு ஒரு காரணம்.

Print Friendly, PDF & Email