ஜனாதிபதியின் பதிலை நிராகரிக்கிறார் பேராயர் மல்கம் ரஞ்சித்!
ஆகஸ்ட் 21 அன்று ஒவ்வொரு வீட்டிலும் கறுப்புக் கொடிகள் பறக்கும்
தான் எழுதிய விரிவான கடிதத்திற்கு ஜனாதிபதியிடமிருந்து கிடைத்த பதில் திருப்தி தருவதாகவில்லை எனவும் அதைத் தான் நிராகரிப்பதாகவும் பேராயர் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக, ஜூலை 12, 2021 திகதியிடப்பட்டு, தேசிய கத்தோலிக்க பிரகடனக் குழுவினால் ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவுக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்திற்கு ஜனாதிபதி அளித்த பதில் மழுப்பலாகவும் ஏமாற்றுவதாகவும் இருக்கிறது என நேற்று (13) நடைபெற்ற ஊடகங்களுடனா சந்திப்பின்போது பேராயர் தெரிவித்துள்ளார்.
“இலங்கை ஒரு ‘கட்டாக் காலியான’ நாடாக உருவாகியிருப்பதற்குக் காரணமான ஒரு சிறிய விடயத்தைக் கூட இந்த அரசினால் நிறைவேற்ற முடியவில்லை. எனவே இப்படியான ஒரு நாட்டில் நீதி வழங்கப்படுமென எதிர்பார்க்க முடியாது” என அவர் மேலும் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடந்து 28 மாதங்கள் முடிவுற்ற நிலையில் நீதி என்று எதுவும் பரிபாலிக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்கட்டுமுகமாக ஆகஸ்ட் 21 அன்று ஒவ்வொரு வீட்டிலும் கறுப்புக் கொடிகள் பறக்க விடப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.
Related posts:
- உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் | “நாடு சபிக்கப்பட்டிருக்கிறது” – ஆட்சியாளரைச் சாடும் பேராயர் மல்கம் ரஞ்சித்
- “உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களினால் அரசியல் இலாபம் பெற்று, தொடர்ந்தும் நீதியை மறுத்து வருபவர்கள் தண்டிக்கப்படுவாராக” -செ(ச)பிக்கிறார் பேராயர் மல்கம் ரஞ்சித்
- ஐ.நா. மனித உரிமைகள் சபை | இறுதி வரைவை இணைத்தலைமை நாடுகள் கையளித்தன
- ஆகஸ்ட்டில் மாகாணசபைத் தேர்தல்கள்?