• Post category:CANADA
  • Post published:January 2, 2021
Spread the love

ஜனவரி 7 அதிகாலை 12:01 முதல் நடைமுறைக்கு வரும் சட்டத்தின் பிரகாரம், கனடாவுக்கு பயணிக்கத் தயாராகும், 5 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், தமக்கு கோவிட் நோய் இல்லை என்பதற்கான அத்தாட்சிப் பத்திரத்தை பயணம் ஆரம்பிக்கு முன்னரே சமர்ப்பித்திருக்க வேண்டும் என கனடாவின் போக்குவரத்து அமைச்சர் மார்க் கார்ணோ தெரிவித்துள்ளார்.

கனடாவுக்கு விமானம் மூலம் பயணிப்பவர்கள், பயணத்தை ஆரம்பிக்கும் நாட்டில், பயணத்தை ஆரம்பிப்பதற்கு 72 மணித்தியாலங்களுக்குள் மேற்கொண்ட PCR ஆய்வுகூடப் பரிசோதனையில் ‘கோவிட் நோய்த் தொற்று இல்லை’ என வழங்கப்பட்ட பத்திரத்தைப் பயணிக்கும் விமான நிலைய அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

அது மட்டுமல்லாது, கோவிட் நோய்த் தொற்றி இல்லை என அத்தாட்சிப்படுத்தப்பட்ட பயணிகள் கனடாவுக்குள் வந்திறங்கியதும் கட்டாய 14-நாள் தனிமைப்படுத்தலையும் மேற்கொள்ள வேண்டும். இப்படி வந்திறங்கியவர்கள் கட்டாய தனிமைப்படுத்தலை மேற்கொள்கிறார்களா என்பதைக் கண்காணிப்பதற்கு, தனிமைப்படுத்தல் சட்டத்தின் மூலம், அரசாங்கம் மேற்கொண்டுவரும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேலும் இறுக்குவதற்குத் தீர்மானித்துள்ளது. பயணிகளின் தனிமைப்படுத்தல் திட்டம் அரசாங்க அதிகாரிகளுக்கு ஏற்றுக்கொள்ளப்படமுடியாத பட்சத்தில் அப்பயணிகள் அரசாங்க தனிமைப்படுத்தும் நிலையங்களில் தங்கவைக்கப்படுவார்கள்.

கனடாவுக்குப் பயணிக்க விரும்புபவர்கள் தமது ஸ்மார்ட் ஃபோன்களில் ArriveCAN என்ற செயலியைப் பாவிப்பதன் மூலமோ அல்லது இணையத்தளத்தின் மூலமோ தமது தநிமைப்படுத்தல் தொடர்பான திட்டங்களையும், தொடர்புகொள்ளும் விபரங்களையும் பதிவேற்றிக் கொள்ள முடியும்.



கனடிய அரசின் இவ்வறிவுறுத்தல்களை மீறுபவர்கள், தனிமைப்படுத்தல் சட்டத்தின் (Quarantine Act) பிரகாரம், 6 மாத சிறைத் தண்டனை உடபட / அல்லது $750,000 தண்டத்துக்கு ஆளாக்கப்படுவார்கள்.

தற்போது பயணித்துக் கொண்டிருக்கும் கனடியர்கள் நாடு திரும்புவதற்கு முதல், உரிய காலக்கெடுவுக்குள், கோவிட் பரிசோதனைகளைச் செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பயனுள்ள இணைப்புகள்:

தனிமைப்படுத்தல் தகவல்கள்

ArriveCAN

பயணத்திற்கு முன்னான தேவைகள்

Print Friendly, PDF & Email