ஜனவரி 10 | நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை நினைவு நாள்

தமிழர்களை ஆயுதப் போராட்டத்துக்குத் தூண்டிய நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடட்டுப் படுகொலைகள் நடைபெற்று இந்த ஜனவரி 10 (2022), 48 வருடங்கள் முடிகின்றன. 9 தமிழர்களைப் பலியெடுத்த கொலைவெறியர்களில் சிலர் இன்னும் உயிரோடு இருக்கலாம. அவர்களை ஏவிவிட்ட சிங்கள இனவெறி அரசு எங்கேயும் போய்விடவில்லை.

தென்னாபிரிக்காவில் போல நல்லிணக்க முயற்சிகளிலோ அல்லது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கோருவதற்கான முனைப்புக்ளோ இதுவரை நடைபெறவில்லை.

இறந்தவர்கள் ஆயுதம் கூடத் தூக்கவில்லை. அவர்களை நினைவுகூருவதற்கான உரிமையும் இப்போது மறுக்கப்பட்டுவிட்டது. அவர்களது நினைவாக எழுப்பப்பட்ட நினைவாலயமும் சிதைக்கப்பட்டுவிட்டது.

மனச்சாட்சி இல்லாத மனிதர்கள் மகிழ்ச்சியாக வாழ்வதில்லை எனத் தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதில் இன்னும் நம்பிக்கை இருக்கிறது. இம் மரணங்களுக்கான நீதி ஒருநாள் வழங்கப்படவேண்டும். இறந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக வழிபடுகிறோம்.

நான்காவது உலகத் தமைழாராய்ச்சி மாநாட்டில் அநியாயமாகக் கொல்லப்பட்டவர்கள்