சோயா உணவினால் உடலுக்குத் தீங்கு ஏற்படுமா? -

சோயா உணவினால் உடலுக்குத் தீங்கு ஏற்படுமா?

பெண்களில் மார்புப் புற்றுநோய் ஏற்படுவதற்கு சோயா உணவும் காரணமாக இருக்கிறது என்கிறது ஒரு ஆய்வு.

சோயா, ஆசிய மக்களின் பாரம்பரிய உணவாகவும், மேற்கத்தய உணவாகக் கடந்த 60 வருடங்களாகவும் இருந்துவருகிறது. சோயா உணவு, ரோபு, ரெம்பெ, சோயாப் பால், மைசோ, சோயா சோஸ் எனப் பலதரப்பட்ட வடிவங்களில் அங்காடிகளில் விற்பனையாகின்றது.

சிறப்பான புரதச் சத்து, நிரம்பலற்ற கொழுப்பமிலங்கள் (unsaturated fatty acids) B வைட்டமின்கள், நார்ச் சத்து (fibre), இரும்புச் சத்து (iron), கல்சியம் மற்றும் துத்தநாகம் (zinc) போன்ற உடலுக்கு நன்மை பயக்கும் அம்சங்களச் சோயா உணவு கொண்டிருப்பதோடு இருதய வியாதிகளைக் குறைப்பதற்கும் அது ஒரு காணமாக இருக்கிறது என்பதோடு, இறைச்சிக்கு மாற்றீடாக மேற்குநாடுகளில் உண்ணப்படுகிறது என்பதும் நல்ல விடயங்கள். இருப்பினும் கடந்த பத்து வருடங்களாக, சோயா உணவு உடலின் ஹோர்மோன்களின் செயற்பாடுகளில் குளறுபடிகளைச் செய்கிறது என ஒரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.

இதற்குக் காரணம் சோயா உணவில் காணப்படும் அதிக அளவிலான ஐசோபிளேவின் (isoflavones). இக்கூட்டுப் பொருள் ‘எஸ்ட்றோஜெனிக்’ (oestrogenic) குணாதிசயங்களைக் கொண்டிருக்கிறது என்றும் இதனால் பெண் தன்மையைத் தீர்மானிக்கும் ஹோர்மோன்கள் உடலில் அதிகமாகச் செயற்பட வழிவகுக்கிறது என்றும் சில ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். எஸ்ட்றோஜின் உடலில் அதிகமாக இருக்கும்போது அதன் ஒரு பக்க விளைவாகப் பெண்களில் மார்புப் புற்றுநோய் ஏற்படச் சாத்தியக்கூறுகள் அதிகமென்றும் கூறப்படுகிறது.

இருப்பினும் இது பற்றி மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டுமெனவும் அவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

Please follow and like us:
error0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *