ஜூன் 3ம் திகதி 9 வயது பெண் சிங்கம் கோவிட் தொற்றினால் இறந்தது
சென்னை, வண்டலூரிலுள்ள லுள்ள அறிஞர் அண்ணா மிருகக்காட்சிச் சாலையில், கோவிட்-19 தொற்றுக்குள்ளாகி, பத்மநாபன் எனப் பெயரிடப்பட்ட 12 வயது ஆண் சிங்கமொன்று நேற்று (16) ,உயிரிழந்துள்ளது. இதற்கு முன்னர் ஜூன் 3ம் திகதி நீலா என்ற பெயருடைய 9 வயது பெண் சிங்கம் கோவிட் தொற்றினால் இறந்ததைத் தொடர்ந்து பரிசோதிக்கப் பட்டதில் பத்மநாபனும் நோய்த் தொற்றுக்குள்ளாகியிருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டதாயினும் அது பலனளிக்காமையால் நேற்று காலை 10:15 மணிக்கு பத்மநாபன் உயிரிழந்தது என மிருகக்காட்சிச் சாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
வண்டலூர் மிருகக்காட்சிச் சாலையில் உள்ள 11 சிங்கங்களும் கோவிட் தொற்றுக்காகப் பரிசோதிக்கப்பட்டனவெனவும் அவற்றில் நீலாவும், பத்மநாபனுமே கோவிட் தொற்றுள்ளவையாகக் காணப்பட்டனவெனெவும் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அதே வேளை ராகவ் என்ற பெயருடைய இன்னுமொரு சிங்கம் கேனைன் டிஸ்ரெம்பர் வைரஸ் (Canine Distemper Virus (CDV)) என்னும் இன்னுமொரு வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருப்பதாகவும் இவ் வைரஸ் தொற்றுக்கு எதிராக வண்டலூர் சிங்கங்கள் ஒன்றிற்கும் தடுப்பூசிகள் ஏற்றப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டிலுள்ள மிருகக்காட்சிச் சாலைகளிலுள்ள அனைத்து விலங்குகளுக்கும் தடுப்பூசிகள் வழங்கப்படவேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. (தி நியூஸ் மினிட்)