சு.சுவாமி|முஸ்லிம்களின் சொத்துரிமைகளை விட இந்துக்களின் அடிப்படை உரிமை மேலானது! -

சு.சுவாமி|முஸ்லிம்களின் சொத்துரிமைகளை விட இந்துக்களின் அடிப்படை உரிமை மேலானது!

செப்டம்பர் 15, 2019

“இராமர் கோவில் கட்டுவதற்காகக்த் தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு இந்த வருடம் நவம்பர் அளவில் வெளியாகும் எனவும் கோவில் கட்டுவதற்கு அது சாதகமாகவே இருக்கும் என நம்புவதாகவும் பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி கூறினார். இந்துக்களின் அடிப்படை உரிமை, முஸ்லிம்களின் சொத்துரிமையைவிட மேலானதென அவர் மேலும் தெரிவித்தார்.

பாபர் மசூதி

“இராமர் பிறந்த இடத்திலிருந்து கோவிலை அகற்ற முடியாது. தீர்ப்பு வெளியானதை அடுத்து உடனடியாக அதன் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கும்” எனவும் அவர் தெரிவித்தார்.

தனது 80 வது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக அவர் அயோத்திக்குச் சென்றிருந்த போதே அவர் தன் கருத்துத்தைத் தெரிவித்தார். முன்னர் இராமர் கோவில் இருந்து இடிக்கப்பட்ட பின்னர் அந்த இடத்தில் ஒரு தற்காலிக கோவிலை அமைத்து இந்துக்கள் வழைப்பாடுகளைச் செய்கிறார்கள். சுப்பிரமணிய சுவாமியின் பிறந்தநாளுக்கு அங்கு வழிபாடுகள் செய்யப்பட்டன.

“பாபர் மசூதி மீதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கும் போது சுப்பிரமணிய சுவாமி இப்படியான அறிக்கைகளை விடக்கூடாது. அவரது கருதுக்களைக் கூறும் உரிமையை நான் மறுக்கவில்லை ஆனால் அவற்றை அவர் உச்ச நீதிமன்றத்தில் கூறிக்கொள்ளலாம்” என மசூதி நிர்வாகி சப்ர்யாப் ஜிலானி ‘இண்டியா டுடே’ தொலைக்காட்சிக்குத் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  அயோத்தி இந்துக்களுக்குரியது | உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
error

Enjoy this blog? Please spread the word :)