சுவிஸ் தூதரக சம்பவம் | ஆதாரங்கள் இல்லை - குற்ற விசாரணைப் பிரிவு -

சுவிஸ் தூதரக சம்பவம் | ஆதாரங்கள் இல்லை – குற்ற விசாரணைப் பிரிவு

Spread the love

டிசம்பர் 14, 2019

சுவிஸ் தூரக ஊழியர் கடத்தப்பட்டதாக மேற்கொள்ளப்பட்ட புகார் குறித்து விசாரித்த குற்ற விசாரணைப் பிரிவு, அதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை என வியாழனன்று கொழும்பு தலைமை நீதிபதி லங்கா ஜயரத்னவுக்கு தெரிவித்திருக்கிறது.

சம்பவம் நடைபெற்றதாகக் கடத்தப்பட்ட ஊழியர் வாக்குமூலத்தில் கொடுத்த இடமான புனித பிரிஜெட் கன்னியர் மடத்தருகே அப்படியொரு சம்பவமே நடைபெறவில்லையெனப் குற்ற விசாரணைத் துறையினர் நீதிபதிக்குக் கொடுத்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கொள்ளுப்பிட்டியில் இருக்கும் மல்மைறா கோர்ட் குடியிருப்பிற்கு அருகில் சம்பவம் நடைபெற்றதாக அவ்வூழியர் முறைப்பாடு செய்திருந்தார்.

சம்பவம் நடைபெற்றதாக அவர் கொடுத்த, 20, 2/2 பல்மைறா கோர்ட், பல்மைறா அவனியூ, கொழும்பு 03 என்ற விலாசத்தில் அப்படி எதுவும் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை எனப் குற்ற விசாரணைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் அதை உறுதிப்படுத்துவதற்காக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டிசம்பர் 8ம் திகதி மேகொள்ளப்பட்ட விசாரணைகளின்போது மேற்குறிப்பிட்ட ஊழியர் இரண்டு தடவைகள் மயக்கமுற்றபடியால் விசரணைகளைத் தொடரமுடியாமற் போய்விட்டதென்றும் அப்போது தூதரக மருத்துவரும், அதிகாரிகளும் அருகிலிருந்தார்கள் என்றும் குற்ற விசாரணைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஊழியர் தொலைபேசியில் உரையாடியதாகக் கூறப்படும், ஒரு தூதரக அதிகாரியுட்பட, மேலும் இருவரிடம் வாக்குமூலங்கள் பெறப்படவேண்டுமெனவும் குற்ற விசாரணைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதே வேளை, குறிக்கப்பட்ட தூதரக ஊழியர் சுவிஸ் நாட்டில் தஞ்சம் கோருவதற்காக மேற்கொள்ளவிருந்த பயணத்தைத் தடுக்கும் முகமாக அவரை டிசம்பர் 17 வரை நாட்டைவிட்டு வெளியே செல்லமுடியாதபடி கொழும்பு மாஜித்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், அவரது மனநலம் பற்றிய பரிசோதனை ஒன்றைச் செய்யவேண்டுமெனவும் அது பணித்துள்ளது.

நவம்பர் 25 இல் கடத்தப்பட்டதாகக் கருதப்படும் சம்பவத்தின்போது அவர் பாலியல் ரீதியாவவும் தாக்கப்பட்டாரா எனக் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியின் அலுவலகத்தினால் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நீதி மன்றம் பணித்திருந்ததற்கமைய தடயவியல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

தற்போது சட்ட வைத்திய அதிகாரி கடத்தப்பட்ட ஊழியர் விசேட மனவியல் நிபுணர்களின் குழுவினால் மனவியல் பரிசோதனைக்கும் உள்ளாக்கப்படவேண்டுமெனப் பணித்திருக்கிறார். அதன் அறிக்கை டிசம்பர் 17 இல் சமர்ப்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பிரகாரம் அவரது பயணத்துக்கான தடையை டிசம்பர் 17 வரை நீதிமன்றம் பின்போட்டுள்ளது.

கடந்த பல நாட்களாகக் குற்ற விசாரணைப் பிரிவின் முன் வாக்குமூலமளித்துவரும் சம்பந்தப்பட்ட ஊழியர் உடல், உள ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஊழியரின் சார்பில் பங்குபற்றும் சட்டத்தரணிகள் குழுவில் அங்கம் வகிக்கும் உபுல் குமாரப்பெருமா தெரிவித்துள்ளார்.

அரச தரப்பில் சட்டத் தரணி ஜனக பெரேரா பிரதிநிதித்துவம் செய்கிறார்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  மக்கள் அபிலாஷைகளை நிறைவேற்ற 19 வது திருத்தம் அகற்றப்பட வேண்டும் - கோதாபய ராஜபக்ச

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *