சுமந்திரன் - கோதா சந்திப்பு -

சுமந்திரன் – கோதா சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். பா.உ. திரு மதியாபரணம் சுமந்திரன் சிறிலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோதபாய ராஜபக்சவை விரைவில் சந்தித்துத் தமது கட்சியின் ஆதரவு குறித்த நிலைப்பாட்டைத் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச் சந்திப்பின்போது கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்சவும், கட்சியின் தேசீய ஒருங்கிணைப்பாளர் பசில் ராஜபக்சவும் உடனிருப்பர் எனத் தெரிய வருகிறது.

இந்தச் சந்திப்புக்கான வேண்டுகோளை கோதபாய அவர்கள் கேட்டிருந்தார் என திரு சுமந்திரன் அவர்கள் கொழும்பிலிருந்து வெளிவரும் டெய்லி மிரர் பத்திரிகைக்குத் தெரிவித்திருந்தார்.

ஐ.தே.கட்சியின் வேட்பாளாரான சஜித் பிரேமதாச அவர்களையும் திரு சுமந்திரன் அவர்கள் சந்தித்துத் தனது கட்சியின் நிலைப்பாடு குறித்துத் தெரிவித்திருந்தார்.

“எங்கள் நிலைப்பாடு பற்றி நாம் அவருக்குத் (கோதபாய) தெரிவிப்போம். அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்ந்து முன்னெடுக்கப்படவேண்டும் என்பது பற்றியும், காணிகள் விடுவிப்பு, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ்த் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களை விடுவிப்பது பற்றியும், இதர பல விடயங்கள் பற்றியும் நாம் அவரோடு பேசவுள்ளோம். அதே வேளை, திரு பிரேமதாச அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தையும் பார்த்து ஒரு முடிவை எட்டுவோம்” என சுமந்திரன் டெய்லி மிரர் பத்திரிகைக்குத் தெரிவித்திருந்தார்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  துட்டகைமுனு ஸ்தூபி முன் ஜனாதிபதி ராஜபக்சவின் கொள்கைப் பிரகடனம்
error

Enjoy this blog? Please spread the word :)