சுப்பிரமணிய சுவாமி இலங்கை வருகிறார்


இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பின்பேரில் அவரது நீண்டகால, நெருங்கிய குடும்ப நண்பரும் பாரதீய ஜனதா கட்சி உறுப்பினருமான சுப்பிரமணியம் சுவாமி இன்று இலங்கைக்கு பயணம் ஒன்றை மேற்கொள்கிறார்.

பிரதமரின் ஏற்பாட்டில், இன்று மாலை அரச மாளிகையில் இடம்பெறவுள்ள நவராத்திரி பூசையில் பங்குகொள்வதற்காக அவர் விசேட விமானமொன்றில் அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

அவரது வருகையின்போது, மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்படப் பல அமைச்சர்களைச் சந்திக்கும் அதே வேளை, பாதுகாப்பு அமச்சின் தேசிய பாதுகாப்பு கற்கை நிலையம் ஒழுங்குசெய்துள்ள சந்திப்பிலும் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச் சந்திப்பில் பாதுகாப்புச் செயலாளருடன் முப்படைத் தளபதிகளும் கலந்துகொள்ளவுள்ளார்கள்.