Science & Technology

சுனித்தா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர்: 278 நாட்களுக்கான மேலதிக ஊதியம் $1430!

விண்வெளி வீராங்கனை சுனித்தா வில்லியம்ஸ் அவரது சக வீரர் புட்ச் வில்மோருடன் விண்வாடியில் 278 நாட்களைக் கழித்து மீட்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மத்திய அரசின் பணியாளர்கள் என்ற படியால் அவர்களது மேலதிக நேரச் செலவீனத்துக்கு விசேட ஊதியம் வழங்கப்படமாட்டாது என நாசா அறிவித்திருக்கிறது. அமெரிக்க மத்திய அரசின் மாதாந்த சம்பளப்பணியாளர்களுக்கு இந்த சலுகை இல்லை என்றபடியால் வில்லியம்ஸும், வில்லியமும் தேவையானால் சமூக உதவிப்பணத்திற்குத் தான் விண்ணப்பிக்க வேண்டும்.

எட்டு நாள் ‘சுற்றுலாவாக’ ஆரம்பித்த இந்த விண்வாடிக்கான பயணம் போயிங்க் ஸ்ரார்லைனர் விண்ண்ணூர்தி பழுதடைந்ததால் 278 நாட்கள் நீடித்தது. இதில் இந்த இருவருக்கும் எதுவித பங்கில்லையெனினும் அவர்களுக்கான நட்ட ஈட்டை வழங்க நாசா மறுத்துவிட்டது.


தற்போதைய சட்டத்தின்படி போக்குவரத்து, சாப்பாடு, உறைவிடம் ஆகிய செலவுகளைப் பொறுப்பேற்கும் நாசா நாளொன்றுக்கு $5.00 டொலர்களை உதவிப்பணமாகவும் இவ்வெண்வெளி வீரர்களுக்கு வழங்குகிறது. அப்படிப் பார்க்கின் 286 நாட்களுக்கும் தலா மொத்தம் $1430 வழங்கப்பட வேண்டும். இதே வேளை விண்வெளி வீரர்களின் சம்பளம் வருடத்திற்கு $94,998 முதல் $123,152 வரை வழங்கப்படுகிறது.

இதுபற்றி ஜனாதிபதி ட்றம்பிற்கு விளக்கமளிக்கப்பட்டபோது ஆச்சாரியமடைந்த ஜனாதிபதி “இத்தொகை போதாது. வேண்டுமானால் நான் எனது சொந்தப்பணத்தில் அவர்களுக்கு நட்ட ஈட்டை வழங்குகிறேன்” எனக்கூறியதாகக் கேள்வி.

போயிங் நிறுவனத்தால் மீளக்கொண்டுவர முடியாதிருந்த விண்வெளி வீரரை இலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் ட்றாகன் விண்ணூர்தியில் பூமிக்குக் கொண்டுவந்துள்ளார்கள். நிறையற்ற விண்ணில் நீண்டநாட்கள் இருந்தமையால் இவ்வீரர்களின் உடல்கள் சிதைவுக்குள்ளாகியிருக்ககூடும் என்பதனால் அவர்கள் மேலும் சில காலம் நாசாவின் பராமரிப்பில் வைத்துக் கண்காணிக்கப்படுவார்கள் எனக்கூறப்படுகிறது.