சுஜித் வில்சனின் உடல் இறுதி மரியாதைக்காகப் புதூர் கொண்டுவரப்பட்டது -

சுஜித் வில்சனின் உடல் இறுதி மரியாதைக்காகப் புதூர் கொண்டுவரப்பட்டது

Spread the love

அக்டோபர் 29, 2019

சுஜித் வில்சனை மீட்கும் முயற்சிகள்

குழாய்க் கிணற்றில் விழுந்து அகால மரணமான சுஜித் வில்சன் என்ற இரண்டு வயதுக் குழந்தையின் உடல், பிரேத பரிசோதனை செய்யப்பட்டதையடுத்து, இன்று அதிகாலை புதூர், நடுகாட்டுப்பட்டியிலுள்ள அவரது வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டது.

குழந்தை வில்சனின் உடல் குழாய்க் கிணற்றினுள் மிகவும் அழுகிய நிலையில் இருந்ததாக போக்குவரத்துத் திணைக்கள முதன்மைச் செயலர் ஜே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

“குழந்தையை உயிருடன் மீட்க எல்லா முயற்சிகளும் எடுக்கப்பட்டன. ஆனாலும் குழாய்க் கிணற்றிலிருந்து துர் நாற்றம் முகரப்பட்டதையடுத்து, துரதிர்ஷ்டவசமாக முயற்சிகள் கைவிடப்பட்டு கிணற்றிலிருந்து உடலை மீட்கவேண்டி வந்துவிட்டது” என அவர் மேலும் தெரிவித்தார்.

குழந்தையை மீட்கும் பணியில் மருத்துவர்களும், அரச அதிகாரிகளும், மீட்புப் பணியாளர்களும் தொடர்ந்து 80 மணித்தியாலங்களுக்கு மேல் பாடுபட்டார்கள்.

அக்டோபர் 25 அன்று, தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக்கொண்டிருக்கும்போது மாலை 5:30 மணியளவில் சுஜித் அங்கிருந்த குழாய்க் கிணற்றினுள் தவறி வீழ்ந்துபோனான். 88 அடி ஆழத்தில் அவனது உடல் மாட்டிக்கொண்டது. மாநில அரசின் பேரழிவு நிவாரணக் குழுவைச் சேர்ந்த ஆறு பேர் குழந்தையை மீட்கும் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தார்கள்.

தமிழ்நாடு பதில் முதலமைச்சர் ஓ.பன்னீர்ச்செல்வம், திங்களன்று, குழந்தை வில்சனின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், மீட்புப் பணிகளையும் நேரடியாகக் கண்காணித்திருந்தார்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  பெரியார் விவகாரம் | மன்னிப்புக் கேட்க ரஜனிகாந்த் மறுப்பு!