IndiaNews

சீமானைக் கைதுசெய்யும்படி தமிழ்நாடு காங்கிரஸ் வழக்குப் பதிவு!


நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் பிரகாரம் கைது செய்யும்படி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் பொலிஸ் பணிப்பாளர் சைலேந்திரபாபுவிடம் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளனர். நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சாட்டை துரைமுருகன், மறைந்த தலைவர் ராஜிவ் காந்தி பற்றிக் குறிப்பிட்ட கருத்துக்கள் தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் இம்முறைப்பாட்டைச் செய்துள்ளதாகத் தெரிகிறது.

நாம் தமிழர் கட்சி தீவிரவாதத்தைப் பரப்பி வருகிறது என்பதே இத் தலைவர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. திருநெல்வேலியில் சாட்டை திருமுருகன் பேசிய கூட்டத்தில் “பிரபாகரனின் ஆதரவாளர்கள் எதைச் செய்யக்கூடியவர்கள் என்பது பற்றி சோனியா மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு நன்றாகத் தெரியும்” என்ற சாராம்சத்தில் தெரிவித்திருந்தார்.

கன்யாகுமரியில் நடைபெற்ற ந்நம் தமிழர் கட்சிக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைப் பற்றி அவதூறாகப் பேசினார் என்ற குற்றச்சாட்டில், சாட்டை துரைமுருகன் அக்டோபர் 11ம் திகதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சாட்டை துரைமுருகனின் பேச்சு – நன்றி TamilGlitz