Spread the love

ஜூன் 18, 2020: கால்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதலின்போது சீன இராணுவம் ஆணிகள் பொருத்தப்பட்ட இரும்புக் கம்பிகளை ஆயுதமாகப் பாவித்திருக்கலாம் என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன. இவ்வாயுதத்தின் புகைப்படமொன்றை இந்திய இராணுவத்திடமிருந்து பெற்றுள்ளதாக பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.

An image showing iron rods studded with nails
கால்வான் மோதலின்போது சீன தரப்பினால் பாவிக்கப்பட்டதாகக் கருதப்படும் ஆயுதம்

1996 இல் இரண்டு தரப்புக்களும் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, துப்பாக்கிகளோ, வெடிமருந்துகளோ இப் பிரதேசத்தில் பாவிக்க முடியாது. எனவே சீன தரப்பு இப்படியான ஆயுதங்களைப் பாவித்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. பிரச்சினைக்குரிய எல்லையில் இரு பகுதியினரும் மோதிக்கொள்வதைத் தவிர்க்க இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாயுதத்தின் படத்தை அஜய் ஷுக்லா என்பவர் தனது ருவீட் செய்தியில் இணனித்திருந்தார். இவர் பாதுகாப்பு விவரங்களில் ஆய்வுகள் செய்துவரும் ஒருவர்.

இம் மோதலின் போது இந்திய தரப்பில் 20 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். சீன தரப்பு இறப்பு விபரம் அறியப்படவில்லை.

14,000 அடி உச்சியில் இம் மோதல்கள் நிகழ்ந்துள்ளனவென்றும், பல வீரர்கள் வேகமாக ஓடும் ஆற்றில் விழுந்துவிட்டனர் என்றும் அப்போது வெப்பநிலை பூச்சியத்திக்குக் கீழே வெகுவாகக் குறைந்திருந்தது என்றும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.



சீனத் தரப்பில் 45 இராணுவத்தினர் மரணமடைந்துள்ளனர் என இந்தியத் தரப்புத் தெரிவித்தாலும் இதை சீனத் தரப்பு உறுதிப்படுத்தவில்லை.

“இந்திய இராணுவம் இரண்டு தடவைகள் எல்லையைக் கடந்து எமது வீரர்களைத் தாக்கியது, இதன் விளைவாக இரு தரப்பும் மோதவேண்டி ஏற்பட்டது” என்றுசீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜாவோ லிஜியன் தெரிவித்ததாக ஏ.எஃப்.பி. செய்தி வெலீயிட்டுள்ளது.

கல்வான் பள்ளத்தாக்கு தமக்கே சொந்தமானது என சீனா மீண்டும் வலியுறுத்தியிருக்கிறது. இந்தியா இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளது. இரு தரப்பும் மோதல் தவிர்ப்பு விடயமாகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் சீன இராணுவம் கட்டிடமொன்றை நிர்மாணிக்க முயன்றதாக இந்தியாவின் வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்று தெரிவிக்கின்றது.

38,000 ச.கி.மீ இந்திய பிரதேசத்தைச் சீனா ஆக்கிரமித்தது மட்டுமல்லாது, அங்கு பல்லாயிரக்கணக்கான சீன இராணுவத்தை நிலைநிறுத்தியுள்ளதாக இந்தியா குற்றம்சாட்டி வருகிறது. இதை விடுவிக்க கடந்த 3 தசாப்தங்களாக இரு தரப்புக்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தாலும் எதுவித முடிவுகளும் இதுவரை எட்டப்படவில்லை.

Print Friendly, PDF & Email
Related:  ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் இலங்கை மீது அதிருப்தி