Spread the love

கோவிட்-19 தொற்றுத் தடுப்புக்குப் பாவிக்கும் 5 இலட்சம் முகவாய்க் கவசங்கள், 952 உடற் பாதுகாப்புக் கவச அணிகள் (PPE), கிருமியகற்றிகள் ஆகியவற்றைச் சீனாவுக்குக் கடத்திச் செல்ல எடுத்த முயற்சியை நேற்று டெல்ஹி சுங்கப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.

தொற்றுநோய்த் தடுப்பு உபகரணங்களின் பற்றாக்குறை மற்றும் நோய்ப் பரவல் அதிகரிப்பின் காரணமாக பாதுகாப்பு உபகரணங்கள், சுவாசக் கருவிகள், கவசத் தயாரிப்புக்குத் தேவையான பண்டங்கள் போன்றவை ஏற்றுமதி செய்வதை மார்ச் 19 முதல் இந்தியா தடை செய்திருந்தது. கிருமியகற்றிகளின் ஏற்றுமதி ஏப்ரல் 7 தடைசெய்யப்பட்டிருந்தது.

புலனாய்வுத் தகவல்கள் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து, விமான மூலம் சீனாவுக்கு அனுப்பப்படவிருந்த பல பொதிகளைப் பரிசோதித்ததில் 5.08 இலட்சம் முகக் கவசங்கள், 57 லீட்டர்கள் கிருமியகற்றி, 950 போத்தல்கள், 952 உடற்கவசத் தயாரிப்பிற்கான பொருட்கள், 2,480 கிலோ கவசத் தயாரிப்புத் துணி ஆகியவற்றை டெல்ஹி சுங்கப்பிரிவு கைப்பற்றியது.

டெல்ஹி சுங்கத் திணைக்களம் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்திருக்கிறது.


Print Friendly, PDF & Email
Related:  கோவிட்-19 எதிர்வினை | சீனாவைத் தனிமைப்படுத்த அமெரிக்கா திட்டம்