• Post category:Asia / SRILANKA
  • Post published:November 6, 2020
Spread the love

இலங்கையில் நல்லாட்சியை முன்னெடுக்க சீனாவின் ஆலோசனை

சீன கம்யூனிஸ்ட் கட்சியும் (CPC), சிறீலங்கா பொதுஜன பெரமுனவும் (SLPP) புதனன்று இணையவழிக் கருத்தரங்கு ஒன்றின் மூலம் சந்திப்பொன்றை நிகழ்த்தியுள்ளன.

சீன கம்யூனிஸ்ட் கட்சி - சிறீலங்கா பொதுஜன பெரமுன இணையவழிச் சந்திப்பு
சீன கம்யூனிஸ்ட் கட்சி – சிறீலங்கா பொதுஜன பெரமுன இணையவழிச் சந்திப்பு

சென்ற மாதம், சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட உறுப்பினரும் வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பான உள்வட்ட பொலிட் பீரோ உறுப்பினருமான யாங் ஜியெச்சியின் வருகயின்போது ஜனாதிபதியுடன் நிகழ்த்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து நாட்டின் ஆட்சி தொடர்பான தொடர்ச்சியான உரையாடல்களை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டிருந்தது. அதன் முதலாவது சந்திப்பே இதுவெனக் கூறப்படுகிறது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் சர்வதேச விவகாரங்களுகுப் பொறுப்பான, கட்சிச் செயலாளர் லியூ சிகி, சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், செயலாளர் நாயகம் சாகர காரியவாசம், மஹிந்த யாப்பா அபயவர்த்தன, நாமல் ராஜபக்ச, ரமேஷ் பத்திரான உள்ளிட்ட பல பா.உ.க்கள், ராஜாங்க அமைச்சர்கள், மேற்கு மாகாண நகரபிதாக்கள் ஆகியோர் இச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எவரும் இதில் கலந்துகொண்டது பற்றி அறிய முடியவில்லை.

இரண்டு நாடுகளிலும் மண்டபத்தின் பின்னரங்கில் வைக்கப்பட்டிருந்த மாபெரும் பதாகையில் சீன, ஆங்கில மொழிகள் மட்டுமே பொறிக்கப்பட்டிருந்தன.

Print Friendly, PDF & Email