சிவாஜிலிங்கம், ஹிஸ்புல்லா உட்பட 41 பேர் ஜனாதிபதி தேர்தலில் போட்டி! -

சிவாஜிலிங்கம், ஹிஸ்புல்லா உட்பட 41 பேர் ஜனாதிபதி தேர்தலில் போட்டி!

மைத்திரிபால சிறிசேன போட்டியிடவில்லை

அக்டோபர் 6, 2019

ஞாயிறு 12 மணியுடன் முடிவடைந்த ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் பதிவில் இலங்கையின் வரலாற்றிலேயே முதன் முதலாக, 41 பேர் கட்டுப்பணத்தைச் செலுத்தித் தேர்தல் ஆணையத்தில் தமது பெயர்களைப் பதிவுசெய்துள்ளனர்.

சிவாஜிலிங்கம், ஹிஸ்புல்லா உட்பட, அறியப்பட்ட 19 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும், 3 புதிய கட்சிகளின் பிரதிநிதிகளும், 19 தனியார்களும் இத் தேர்தலில் போட்டியிடுகின்றார்கள். தற்போதைய ஜனாதிபதி போட்டியிடவில்லை. அவரது கட்சியான சி.ல.சு.கட்சி யாருக்கு ஆதரவளிக்கப் போகிறது என்பதை அவர் நாளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேட்பாளர் நியமனம் நாளை காலை 9:00 முதல் 11:00 வரை நடைபெறுமெனவும் வேட்பாளர் நியமனங்களை எதிர்ப்பவர்கள் நாளை காலை 11:00 முதல் 12:00 வரை செய்யலாம் என தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கான செலவு 5 பில்லியன் ரூபாய்களை எட்டலாமென தேர்தல் ஆணையத்தின் தலைவர் மஹிந்த் தேசப்பிரியா தெரிவித்தார். 1600 காவற்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்

இத் தேர்தலுக்காக பிணக்குத் தீர்ப்பு மையம் (dispute resolution centre) ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதென்றும், பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை தொலைபேசி, தொலை நகல், ஈ-மெயில், வைபர் / வட்ஸப், முகநூல் மற்றும் தேர்தல் ஆணையத்தின் இணையத்தளம் மூலமாகச் செய்துகொள்ளலாமென்றும் ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கான தொடர்புகள்:

தொலைபேசி: 01120868 212 /560/217 ஃபக்ஸ்: 0122 868 526/529 வைபர் / வட்ஸப் – 0719 160 000 ஈ-மெயில்: complaint.pre2019@elections.gov.lk, Facebook: Election Commission of Srilanka /Tell Commission Election Comission of Srilanka

Please follow and like us:
error0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *