சிறீலங்கா ரெலிகொம் தலைவரின் சம்பளம் குறைப்பு - ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு -

சிறீலங்கா ரெலிகொம் தலைவரின் சம்பளம் குறைப்பு – ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

Spread the love

டிசம்பர் 5, 2019

குமாரசிங்க சிறிசேன

சிறீலங்கா ரெலிகொம் தலைவரும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரருமான குமாரசிங்க சிறிசேனவின் சம்பளம் ஜனாதிபதி ராஜபக்சவினால் மிகவும் பாரதூரமான அளவுக்குக் குறைக்கப்பட்டுள்ளது.

அவரது தற்போதைய சம்பளம் 2 மில்லியன் ரூபாய்கள். அத்துடன், சிறீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் உப நிறுவனங்களான மொபிரெல் போன்றவற்றால் கிடைக்கும் வருமானத்தின் மூலம் கிடைக்கும் ஊக்குவிப்பு பணம் போன்றவற்றால் அவரது வருமானம் 2 மில்லியன்களை விடவும் அதிகமானது எனத் தெரிகிறது.

ஜனாதிபதி ராஜபக்சவின் அதிரடி நடவடிக்கையால் இது தற்போது 2.5 லட்சங்களாகக் குறைக்கப்படுகிறது. இவ்வளவு பாரதூரமான சம்பளக் குறைப்பு இதுவரை நடந்ததில்லை.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில், தனது கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவை பொதுஜன பெரமுனவுக்கு வழங்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி சிறிசேன பேசிய பேரங்களில் ஒன்று, தனது சகோதரரின் பதவியைக் காப்பாற்ற வேண்டும் என்பது. மற்றய பேரம், அரசாங்கத்தின் விளம்பர வேலைகள் அனைத்தும் தனது மகளின் விளம்பர நிறுவனத்துக்கே கொடுக்கப்பட வேண்டும் என்பது.

ஆரம்பத்தில், ஜனாதிபதி தனது சகோதரர் மஹிந்தவின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டிருந்தாலும் அவரைப் பதவி நீக்கம் செய்யாமல் சம்பளத்தைக் குறைப்பதன் மூலம் தன் வாக்கையும் காப்பாற்றி அதே வேளை தன் கொள்கையையும் விட்டுக்கொடுக்காமல் அப் பதவிக்கு தகுதியான ஒருவரை நியமிக்க நடவடிக்கையும் எடுத்துவிட்டார் என்று தெரிகிறது.

ஜனாதிபதி ராஜபக்சவின் இது போன்ற பல நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. முந்திய ராஜபக்ச ஆட்சி போல் ஊழல் நிறைந்ததாய் இருக்க மாட்டாது என்பதோடு, மக்களின் பணத்தைச் சிக்கனமாகச் செலவு செய்யும் ஆடசியாகவும் இருக்கப்போகிறது என்ற நம்பிக்கையும் மக்களிடத்தில் ஏற்பட்டு வருகிறது.

இது வரப்போகும் பொதுத் தேர்தலில் 2/3 பெரும்பான்மையைப் பெறுவதற்காகச் செய்யும் நடவடிக்கையா அல்லது கோதாபயாவின் குணாம்சமே இப்படியானது தானா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  இது ஆரம்பம் மட்டுமே - எச்சரிக்கிறார் சரத் பொன்சேகா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *