சிறீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் நிறுத்தப்படுவார் - சிறீசேன -

சிறீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் நிறுத்தப்படுவார் – சிறீசேன

பலநாட்கள், பலகட்சிகள் என்று பேரம் பேசுதலைத் தொடர்ந்து சிறீலங்கா சுதந்திரக் கட்சி, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனது சார்பில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதாக முடிவு செய்திருக்கிறது.

சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர், பா.உ. தாயாசிறி ஜயசேகர தேர்தல் ஆணையத்துக்கு இது பற்றித் தெரிவித்துள்ளார் என பா.உ. வீரகுமார திசநாயக்கா ஊடகவியலாளருக்குத் தெரிவித்தார்.

வேட்பாளரை நிறுத்துவதா இல்லையா என்பதற்கான முடிவைச் செவ்வாயன்று நடைபெற்ற கட்சி மாநாட்டில் அறிவிக்கப்படும் என ஆரம்பத்தில் கூறப்பட்டிருந்தாலும் மாநாட்டில் இது பற்றி எதுவும் அறிக்கப்படவில்லை.

சிறீலங்கா சுதந்திரக் கட்சியும், சிறீலங்கா பொதுஜன பெரமுனயும் கூட்டணி ஒன்றை அமைப்பது தொடர்பில் சில வாரங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தன. கடந்த வாரம் ஜனாதிபதி சிறீசேனவும், மஹிந்த ராஜபக்சவும் பேச்சுவார்த்தையின் இறுதிக்கட்டத்தில் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எதுவுமே அறிவிக்கப்பட்டதிருந்த நிலையில் தற்போது இந்தச் செய்தி வந்திருக்கிறது.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  இளவரசர் கோதபாய ராஜபக்சவுக்கு முடிசூட்டு விழா!
error

Enjoy this blog? Please spread the word :)