சிறீலங்காவில் அமெரிக்கப் படைகள் நிலைகொள்ளலாம் | பாதுகாப்புச் செயலாளர் -

சிறீலங்காவில் அமெரிக்கப் படைகள் நிலைகொள்ளலாம் | பாதுகாப்புச் செயலாளர்

Spread the love

‘சிறீலங்காவில் அமெரிக்கப் படைகள் நிலைகொள்ள மாட்டாதென்பதற்கு என்னால் உத்தரவாதம் தரமுடியாது’ எனப் புதிதாக நியமனம் பெற்றிருக்கும் பாதுகாப்புச் செயலாளர் சாந்தா கொட்டெகொட  தொலைக்காட்சிப் பேட்டியொன்றின் போது குறிப்பிட்டார். ‘நிலைமை அந்தளவுக்குப் போகாது என்ற நம்பிக்கையும் எனக்குண்டு’ அவர் மேலும் தெரிவித்தார்.

‘வருகை தரும் படைகளின் நிலைப்பாட்டு உடன்படிக்கை’ (Status of Visiting Forces Agreement (SOFA)) என்னுமொரு பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றை சிறீலங்காவும் அமெரிக்காவும் விரைவில் மேற்கொள்ளவுள்ளன. இவ்வுடன்படிக்கை பற்றிய உள்ளடக்கம் வெளியிடப்படாத நிலையில் அதன் பின்னணி குறித்த சந்தேகங்கள் பலராலும் எழுப்பப்பட்டு வருகின்றன. ஊடகவியலாளர் பந்துல ஜெயசேகர இதுபற்றி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே பாதுகாப்பு செய்லாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Shantha Kottegoda /Colombo Telegraph

இவ்வொப்பந்தம் கையெழுத்திடப்படுவதற்கு முன்னர் மந்திரிசபையில் சமர்ப்பிக்கப்பட்டுப் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

“அதன் பிறகுதான் இவ்வொப்பந்ததம் எவ்வகையான விளைவுகளை நாட்டில் ஏற்படுத்தும் என்பதை நாம் அறிந்துகொள்ள முடியும். சிறீலங்காவிற்கு வெளிநாட்டு இராணுவம் அவசியமற்றது. அவர்கள் நவீன ஆயுதங்களைக் கொண்டிருந்தாலும் எமது படைகளின் அனுபவத்திற்கு அவர்கள் இணையாக முடியாது. எமது பாதுகாப்பைக் கவனிக்க எமது படைகளினால் முடியும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இங்கு தங்கியிருக்கும் அமெரிக்கப் படையினருக்கு ராஜதந்திர அந்தஸ்து வழங்குதல், சகல அமெரிக்கப் படையினரின் வாகனங்கள், கப்பல்கள், விமானங்கள் எனபன நாடு முழுவதற்கும் செல்லக்கூடிய திறந்த அனுமதி போன்ற அம்சங்கள் இவ்வொப்பந்தத்தில் இருப்பது சிறீலங்காவிற்குப் பாதகமாகவும் அதே வேளை நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும் இறையாண்மைக்கும் அச்சுறுத்தலாக இருக்குமெனவும் பல எதிர்ப்புக் குரல்கள் எழுந்திருந்த நிலையில் இவ்வொப்பந்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருக்கிறது.

இவ்வொப்பந்தத்தைத் துரிதப்படுத்துவதில் அமெரிக்கா கடும் முயற்சிகளை எடுக்கிறது என்றும் அதற்கு ஆதரவாக முன்னாள் வெளியுறவுச் செயலாளர் பிரசாத் காரியவாசம் மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் செயற்படுகிறார்கள் எனவும் பல அரசியல் முக்கியஸ்தர்களும் ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

மங்கள, பிரசாத் இருவருக்கும் நெருக்கமான நிதியமைச்சில் பணி புரியும் மஹிஷினி கொலொன்னெ வை பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கவேண்டுமென முன்னாள் அமெரிக்கத் தூதுவர் அட்டுல் கேஷப் பகீரத முயற்சி எடுத்ததாகவும் ஆனால் அது வெற்றியளிக்கவில்லை எனவும் முன்னர் செய்திகள் கசிந்ததிருந்தன.

இராணுவ தளபதிகளுட்படப் பலராலும் விமர்சிக்கப்பட்டிருந்தாலும் அமெரிக்க ராஜாங்கச் செய்லாளரின் அடுத்த வார சிறீலங்கா வரவின் போது இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்படும் எனவே நம்பப்படுகிறது.

 

 

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  ராஜபக்ச ஆட்சியில் இலங்கையில் மனித உரிமைகளுக்குப் பேராபத்து- மனித உரிமைகள் கண்காணிப்பகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *