சிறீலங்கா|தாமரைக் கோபுரம் இன்று திறப்பு!

தென்னாசியாவில் மிக உயரமானது
சிறீலங்காவின் தாமரைக் கோபுரம் – Photo Credit: Lasantha Kumara

தென்னாசியாவிலேயே அதி உயரமான தாமரைக் கோபுரம் சிறிலங்காவில் இன்று திறக்கப்படுகிறது.

350 மீட்டர் உயரமான இக் கோபுரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைப்பார். பிரதம் ரணில் விக்கிரமசிங்கவும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவும் இவ் வைபவத்தில் கலந்துகொள்வர்.

$104.3 மில்லியன் டாலர்கள் செலவில் சீனாவின் பண உதவியுடன் இக் கோபுரம் கட்டப்பட்டது.

30,600 சதுர மீட்டர் பரப்பளவிலான இக் கோபுரத்தில், தொலைக்காட்சிக் கோபுரம், பயணிகள் விடுதி, அங்காடித் தொடர், மாநாட்டு மண்டபம் ஆகியன இடம்பெறுகின்றன. அத்தோடு, நிலத்தை அண்டிய மாடியில் ஒரு உணவகமும், தகவற் தொடர்புக் காட்சியறையும் இடம்பெறுகின்றன. 6வது மாடியில் இரண்டு கண்காட்சி மண்டபங்களும், ஏழாவது மாடியில் அவதானிப்பு மையம் (onservatory) இடம்பெறுகின்றன.