LIFESports

சிறிலங்கா கிரிக்கெட் அணித் தலைமையை மலிங்காவிற்குக் கொடுக்காதது தவறு | மஹேல ஜெயவர்த்தன

நான் சிறீலங்கா அணிக்குப் பயிற்சியளிக்கப் போவதில்லை 
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் மும்பாய் இந்தியன்ஸ் அணியின் நான்கு தொடர் வெற்றிகளுக்குக் காரணமானவர் எனக் கருதப்படும் முதன்மை பயிற்சியாளரும் சிறீலங்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான மஹேல ஜயவர்த்தன ‘கிரிக்கெட் அரசியலை’க் காரணம் காட்டி சிறீலங்காவின் உலகக் கிண்ண அணிக்குப் பயிற்சியளிக்கமாட்டேன் என மறுத்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘சண்டே ரைம்ஸ்’ பத்திரிகைக்குக் கொடுத்த பிரத்தியேகப் பேட்டியில் அவர் இதைத் தெரிவித்திருந்தார். அவரது பேட்டியின் சாராம்சம் கீழே:
“சிறிலங்காவின் கிரிக்கெட் அணியை நிர்வகிப்பவர்கள் தமது சுய தேவைகளையே முன்னிறுத்துகிறார்கள். உதாரணமாக லசித் மலிங்காவை அவர்கள் நடத்திய விதம் அவமானப்பட வேண்டியது. காயமுற்றதற்குப் பின்னர் கடந்த இரண்டு வருடங்களாக லசித் மலிங்கா முன்னர் போல் ஆடுவதற்குச் சிரமப்பட்டார். ஆனாலும் அவர் தொடர்ந்து முன்னேற்றங்களைக் காட்டி வந்தார். அவரது அனுபவங்களுக்காக மட்டுமே நாம் அவரை எங்கள் அணியில் சேர்த்துக் கொண்டோம். இளைய ஆடடக்காரர்களுக்கு அவர் ஊக்கத்தைக்  கொடுக்கக்கூடியவர் மட்டுமல்ல தனது அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வார். அவர் ஒரு சிறந்த ஆடடக்காரர். எமது பந்து வீச்சுக்காரருக்கு ஒரு ஆசானாக இருப்பார் என்பதற்காகவே எமது அணி அவரைத் தேர்வு செய்தது.
இந்த வருடம் அவர் ஆடுவதற்குத் தயாரான உடல்நிலையுடன் இருந்தார். அவருக்கான திட்டம் ஒன்று எங்களிடம் இருந்தது அதனால் தான் அவரை நாம் ஏலத்தில் எடுத்துக் கொண்டோம். ஜஸ்பிரித் பம்ராவுடன் சேர்ந்து சோடியாகப் பந்து வீசும்போது எதிரணி நடுங்கும். ஐ.பி.எல். இந்த பெரும்பாலான அணிகளுக்கு இந்தச் சோடி சிம்ம சொப்பனமாக இருந்தது. இரண்டொரு ஆட்ட்ங்களில் அவர் கொஞ்சம் சோடை போயிருந்தாலும் பெரும்பாலான தருணங்களில் அவர் திருப்தியாக ஆடி எமது தேவையை நிறைவேற்றித் தந்தார்.
இறுதிச் சுற்றில் இறுதி ஓவரில் அவரை விடச் சிறப்பாக எவருமே ஆடியிருக்க முடியாது. அவரது கடைசிப் பந்தை அவ்வளவு துல்லியமாக வீசுவதற்கான திறமை அவரிடம் இருந்தது. இவற்றைக் கண்டு பிடித்து ஆடடக்காரர்களைத் தேர்வு செய்வதே ஒரு அணியை நிர்வகிப்பவர்கள் செய்ய வேண்டியது.
மலிங்கா அணியின் இதர ஆடடக்காரர்களுடன் இணைந்து பணியாற்றுவதில்லை  என்று சிலர் கூறுவதில் உண்மை இல்லை. அவர் ஒரு சிறந்த குழு மனப்பான்மை கொண்டவர். துரதிர்ஷ்டவசமாக சிறிலங்கா அணியிலுள்ள பலர் தாம் அணித்தலைவராக வரவேண்டுமென்பதற்காக எதை எதையோ சொல்கிறார்கள். அது தான் நான் சொன்ன கிரிக்கெட் அரசியல். சிறிலங்கா அணித் தேர்வாளரின் தலைவர் அணியின் தலைமையை வேறொருவருக்குக்  கொடுத்ததற்குக்  காரணம் அவரிடம் குழுவை ஒன்றிணைத்துப் போகும் தகமை இல்லை எனக் கூறியிருக்கிறார். மலிங்கவின் சிந்தனை வடிவமே வேறு. அவர் ஆட்டத்தை வடிவமைக்கும் விதமே தனி. அணியின் இதர ஆட்டக்காரர்கள் அவரது திட்டமிடலைப் புரியாது விட்டால் அது அவர்களது தவறு.
மலிங்காவுக்கு அணித் தலைமையைக் கொடுக்காததற்கு தேர்வாளர் மட்டும் காரணமல்ல. பின்னணியிலுள்ள பலருக்கு  உலகக்  கிண்ணப் போட்டியின்போது மலிங்கா அணித் தலைவராக இருப்பது விருப்பமில்லை. திமுத்தினுடைய அணித் தலைமை பற்றி எனக்கு எந்தவிதச் சந்தேகமும் இல்லை. அவரும் அணித் தலைவராகச் சிறப்பாக நிர்வகிப்பார் எனவே விரும்புகிறேன்.
அஞ்சலோ மத்தியூஸ், தினேஷ் சந்திமால் விடயங்களிலும் கிரிக்கெட் அரசியல் தந்து கோரப்  பற்களைத்  திணித்திருக்கிறது. இதனால் சிறிலங்காவின் அன்னிக்குத் தான் பேரிழப்பு”
உலகக் கிண்ணப் போட்டி விபரங்கள்