சிறிலங்காவில் பெண்களுக்கு வாழ்வு தரும் முச்சக்கர வண்டிகள்

Spread the love

சிறப்புக் கட்டுரை

லோஷனாவுக்குப் 10 வயது. தனது தாயாருடன் எங்கோ தென்னிலங்கையில் வாழ்ந்துகொண்டிருப்பவன். தினமும் அதிகாலையில் எழுந்து வீட்டிற்கு வெளியே நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் ஆட்டோ ரிக் ஷா விற்கு சாம்பிரானிக் குச்ச்சியைக் கொழுத்தி வைத்து அதை ஓட்டும் அவனது தாயாரின் அன்றய உழைப்பு நன்றாக இருக்க வேண்டுமென்றும், அவள் பாதுகாப்பாகத் திரும்பி வரவேண்டுமென்றும் மன்றாடுவது அவன் வழக்கம்.

ஜெகா அவனது தாயார். கணவனின்றி அவள் மிகவும் கடுமையாக உழைத்து அவனை வளர்க்கிறாள். முன்னர் அவள் தெருப்பணி மற்றும் அரிசி ஆலை உதவியாளர் எனக் கடுமையான வேலைகளைச் செய்துகொண்டிருந்தாள். இப்பொழுது முச்சக்கரவண்டி ஒன்றை வாடகைக்கு ஓட்டிப் பிழைக்கிறாள். பெரும்பாலான ஓட்டிகள் ஆண்களாயினும் அவளும் அம் மரபை உடைத்தெறிந்து மகிழ்வுடன் பிழைப்பை நடத்துகிறாள்.

இப்போது அவளுக்கு 43 வயதாகிறது. அதிகம் சிரமப்படாமல் உழைக்கக் கூடியதாக இருக்கிறது.


அவளது ஆட்டோ இளம் சிவப்பு நிறமுடையது. ரோஸி மே பவுண்டேசன் என்னும் அமைப்பிடமிருந்து குறைந்த வாடகைக்கு அவள் அதைப் பெற்றிருக்கிறாள்.

Mary from Rosie May Foundation with Jega – Photo Credit: Rosie May Foundation

ஜெகாவின் தந்தையார் ஒரு வாகன திருத்துனர். மிகவும் வசதியானவர். ஏழு படுக்கையறைகளைக் கொண்ட வீடொன்ருடன் பெரும் தொகையான சீதனத்தைக் கொடுத்து பெற்றோர் அவளுக்குத் திருமணம் செய்து வைத்தனர். சிறிஅர்ஷன் அவளது கணவனின் பெயர்.

திருமணம் முடிந்த கையோடு அவளது வாழ்வில் தொடர்ந்து அவலங்கள் நிகழத் தொடங்கின. பெற்றோர் இறந்து போனார்கள். லோஷனா வயிற்றில் இருக்கும் போதே கணவன் இன்னுமொரு பெண்ணுடன் ஓடிப்போய் விட்டான். வீடு முதலாக பெற்றோர் கொடுத்த சீதனம் அனைத்தையும் அவன் அழித்து விட்டிருந்தான். ஜெகா குழந்தையோடு தனியே விடப்பட்டிருந்தாள்.

குழந்தைக்கான ஆதரவுப் பணமெதுவும் கணவனிடமிருந்து கிடைக்காத நிலையில் உறவினர்களின் உதவியுடன் மாதம் 500 ரூபாவுடன் அவள் தன குழந்தையுடன் சீவிக்க வேண்டிய நிலை. பருப்பை அவித்து நீராகக் குடித்தே இருவரும் வாழ முடிந்தது.

” துன்பம் என்றால் என்னவென்றே தெரியாமல் வாழ்ந்த சிறுமி நான். மகாராணியைப் போலே வாழ்ந்தேன். கணவன் என்னை விட்டுப் பிரிந்த பின்னரே வறுமை என்றால் என்னவென்பதை நான் அறிந்தேன்” என்கிறாள் ஜெகா.

இப்பொழுது முச்சக்கரவண்டியின் மூலம் பெறும் வருமானத்துடன் கணவனின் ஆதாரப் பணமான 5000 ரூபாய்களும் மாதத்துக்குக் கிடைக்கிறது.

ஜெகா தினமும் தனது வாணியை ஒட்டுகிறாள். தனியான அல்லது கூட்டாக வரும் ஆண்களை அவள் ஏற்றுவதில்லை . குழந்தைகள், பெண்கள், குடும்பங்களே அவளது வாடிக்கையாளர்கள்.

Related:  இலங்கையில் பணத்தை இடுகை செய்யுங்கள் - இலங்கை மத்தியவங்கி ஆளுனர்
Women Auto Drivers with Mary

வண்டி ஓட்ட ஆரம்பித்து சில மாதங்களே ஆனாலும் வண்டியின் வாடகை, எரிபொருட் செலவு போக அவளால் கொஞ்சம் சம்பாதிக்கக் கூடியதாகவுள்ளது.

ரோஸி மே பவுண்டேசன் இவ் வண்டியை அவளுக்கு குறைந்த செலவில் வாடகைக்குக் கொடுத்தது மட்டுமல்ல அத|ற்கான சாரதி பத்திரத்தைப் பெறவும் அது உதவியிருக்கிறது. ஆனாலும் இது ஒரு தர்ம ஸ்தாபனம் அல்ல. சாரதிகள் பயிற்சிக்கும் வண்டியின் பராமரிப்புக்கும் நிறுவனம் பொறுப்பல்ல. சிறீலங்காவில் நேபாளத்திலும் குழ ந்தைகளையும் ஒற்றைத் தாய்மார்களையும் ஆதரிக்கிறது இந்த நிறுவனம்.

இந்த நிறுவனத்தின் சிறிலங்கா திட்ட முகாமையாளர் ரமணி சமரசிங்கா.

“பொதுவாக ஒரு வீட்டில் கணவனே உணவளிப்பவன். அவன் இல்லாமல் போகும்போது மனைவி தனித்துப் போகிறாள். சிறிலங்காவில் தற்போது 1.4 மில்லியன் குடும்பங்கள் பெண் தலைமைத்துவத்தைக் கொண்டவை. உதவி தேவையானவர்களை சமூக சேவைகள் அமைச்சு மற்றும் காவற்துறையினர் எங்களுக்கு தெரியப்படுத்துகிறார்கள்” என்கிறார் ரமணி.

“பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பெண்கள் தனியே பயணம் செய்வது துன்பம் தருவது. ஆண்கள் சிலர் வேண்டுமென்றே சேட்டை விடுவார்கள். பெண்கள் தனியே பயணம் செய்வது ஆபத்தானது ” என்கிறார் ஜெகா.

“இதுவெல்லாம் ஆச்சரியம் தரும் விடயங்களல்ல. தனியே வாழும் பெண்களுக்கு சிறிலங்கா மிகவும் ஆபத்தான நாடு. தனியே வாழும் பெண்களது வீடுகளின் கதவைத் தட்டி பாலியல் தேவைகளுக்கு அழைக்கும் அயலவர்களோடு நாம் வாழ வேண்டிய நிலைமை” என்கிறார் 52 வயதுள்ள விதவை தீப்தி பிரியதர்ஷினி. அவளும் ஒரு முச்சக்கரவண்டி ஓட்டுநர். தாய் மாதம் தான் ஆரம்பித்திருக்கிறாள்.
.
தாய்மார் தங்கள் பெண் குழந்தைகளை ஆன் சாரதிகள் ஓட்டும் ஆட்டோக்களில் தனியே செல்ல அனுமதிப்பதில்லை. எனவே பெண்கள் ஆட்டோ ஓடுவது பாதுகாப்பையும் அளிக்கிறது.

றோசி மே என்பவள் 10 வயதுச் சிறுமியாக இருக்கும்போது அவளுக்குத் தெரிந்த 17 வயதுபி பையனால் 2003ம் ஆண்டு இங்கிலாந்திலுள்ள லெய்செஸ்ட ர்ஷயரில் ஒரு நத்தார் தினக் கொண்டாடடத்தின் போது கொல்லப்பட்டவள். அவளின் பெயரில் அவளது பெற்றோரான மேரி மற்றும் கிரஹாம் ஸ்ரோறி யினால் ரோஸி மே பவுண்டேசன் ஆரம்பிக்கப்பட்டது.

இது வரைக்கும் 9 இளம் சிவப்பு முச்சக்கர வண்டிகள் சிறிலங்காவின் தெருக்களில் ஓடுகின்றன.

“இங்குள்ள பொதுவான பிரச்சினை பெண் ஓட்டிகளைக் கண்டு பிடிப்பது” என்கிறார் மேரி .

“எங்கள் வெற்றிகளைக் கண்டு மேலும் பலர் மனங்களை மாற்றக்கூடும்” என்கிறார் தீப்தி.

அனைத்துலக பெண்கள் தினமான மார்ச் 8ம் திகதி எல்லா இளம் சிவப்பு ஒட்டோ க்களிலும் ஊர்வலம் போனார்கள் இப் பெண்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

>/center>