Science & Technology

சிறிராம் கிருஷ்ணன் ட்றம்பின் AI ஆலோசகர்

சென்னையில் பிறந்த தமிழரான சிறிராம் கிருஷ்ணனைத் தனது செயற்கை விவேக ஆலோசகராக நியமித்திருக்கிறார் டொணால்ட் ட்றம்ப். மைக்கிறோசொஃப்ட் நிறுவனத்தில் 2005 ஆம் ஆண்டு தனது கணனித் தொழில்நுட்பத் தொழிலை ஆரம்பித்த கிருஷ்ணன் பின்னர் யாஹூ, ஸ்நாப், ருவிட்டர், ஃபேஸ்புக் ஆகிய நிறுவனங்களில் பணிபுரிந்திருந்தார். கடந்த ஞாயிறன்று ட்றம்ப் அவரை AI தொழில்நுட்பத்திற்கான மூத்த வெள்ளைமாளிகை ஆலோசகர் பதவிக்கு நியமனம் செய்துள்ளார்.

2022 இல் இலான் மஸ்க் ருவிட்டர் நிறுவனத்தைப் பொறுப்பேற்றதிலிருந்து கிருஷ்ணனுக்கும் மஸ்கிற்கும் இடையிலான நட்பு இறுக்கமானது. இருப்பினும் கடந்த நவம்பர் X நிறுவனத்திலிருந்து அவர் விலகியிருந்தார். 2021 இல் அவரும் அவரது மனைவி ஆர்த்தி ராமமூர்த்தியும் இணைந்து நடத்திவரும் ‘Aarthy and Sriram Show’ எனும் podcast நிகழ்ச்சி பிரபலமான ஒன்று.