சிங்கப்பூர் | 2025க்குள் குடிவரவுச் சாவடிகள் தானியக்கமாகும் -

சிங்கப்பூர் | 2025க்குள் குடிவரவுச் சாவடிகள் தானியக்கமாகும்

செயற்கை நுண்ணறிவை (Artificial Intelligence) மனித மேம்பாட்டுக்குப் பாவிப்பதில் சிங்கப்பூர் முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக, சமூக பொருளாதார அபிவிருத்தியில் இத் தொழில்நுட்பத்தின் பாவனையை விரிவாக்க அரசு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

சிங்கப்பூர் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்

இதன் பிரகாரம் ஐந்து முக்கிய தேசிய செயற்கை நுண்ணறிவுத் திட்டங்களை துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் இன்று (நவம்பர் 13) அறிமுகம் செய்தார்.

இதிலொன்று, சிங்கப்பூரிலுள்ள அனைத்து குடிநுழைவுச் சாவடிகளையும் 2025ம் ஆண்டுக்குள் தானியக்கச் செயற்பாட்டுக்குள் கொண்டு வருதல். கைரேகை, முக அடையாளம், கண் ஆகிய மனித உறுப்புகளை ‘ஸ்கான்’ செய்வதன் மூலம் ஒருவரது அடையாளத்தை உறுதிப்படுத்துவதுடன் அவர் பற்றிய தகவல்களைப் பரிசோதித்து அவரை உள்ளே அனுமதிப்பதா இலலையா என்ற முடிவைக் கணப் பொழுதில் மேற்கொள்ளவும் முடியும்.

சுகாதாரப் பராமரிப்பு, கல்வி, குடியிருப்புப் பேட்டை நிர்வாகம் ஆகியவற்றிலும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பாவனைக்கு ஈடுபடுத்தப்படும்.

“புதிய தொழில்நுட்பங்கள் பற்றி நாடுகள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பொதுவான சவால்களை எதிர்கொள்ள அவற்றைப் பயன்படுத்த வேண்டும்,” என்று, திட்ட அறிமுக நிகழ்வில் பேசும்போது திரு ஹெங் தெரிவித்தார்.

சுகாதாரப் பராமரிப்புக்காக சிங்கப்பூரின் அனைத்துப் பகுதிகளிலும் 2022ஆம் ஆண்டுக்குள் செலினா+ எனப்படும் செயற்கை நுண்ணறிவு முறை பயன்படுத்தப்படும்.

கண்களில் ஏற்படும் கோளாறுகளை இந்த முறை தற்போதுள்ள முறையைவிட இன்னும் அதிகமாகவும் துல்லியமாகவும் கண்டுபிடிக்க உதவும்.

இத்துடன், செயற்கை நுண்ணறிவு முறையைக் கொண்டு குடியிருப்புப் பேட்டை நிர்வாகத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை முன்னுரைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.

கல்வியைப் பொறுத்தவரை, குறிப்பிட்ட சில ஆங்கில மொழிப் பயிற்சிகளைத் திருத்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம்.

அறிவார்ந்த தேசம், மின்னிலக்க அரசாங்க அலுவலகத்தின்கீழ் புதிய தேசிய செயற்கை நுண்ணறிவு அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

ஆய்வு, புத்தாக்கம், நிறுவனம் 2020 திட்டத்தின்கீழ் செயற்கை நுண்ணறிவு உட்பட மின்னிலக்கத் தொழில்நுட்பங்களுக்காக சிங்கப்பூர் $500 மில்லியன் முதலீடு செய்ய இருக்கிறது.

நன்றி: தமிழ் முரசு – சிங்கப்பூர்

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  சந்திரன் தரையில் நொருங்கிய விக்ரம் | நாசா செய்மதி படத்தில் கண்டுபிடித்த தமிழர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)