சிங்கப்பூரின் சனத்தொகையில் வீழ்ச்சி – வெளிநாட்டுப் பணியாளர் வெளியேற்றம் காரணம்

சிங்கப்பூரின் சனத்தொகையில் வீழ்ச்சி – வெளிநாட்டுப் பணியாளர் வெளியேற்றம் காரணம்

Spread the love

2003 ஆம் ஆண்டிறுக்குப் பிறகு, முதல் முறையாக, சிங்கப்பூரின் சனத்தொகையில் சரிவு வீழ்ந்திருக்கிறது. கோவிட்-19 காரணமாகப் பல வெளிநாட்டுப் பணியாளர் தத்தம் நாடுகளுக்குத் திரும்பியதன் காரணமாக இவ் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்த வருட சனத்தொகைக் கணக்கீட்டின்படி, 18,000 வெளிநாட்டுப் பணியாளர் நாடு திரும்பியிருக்கிறார்கள். இந்த 0.3% சனத்தொகை வீழ்ச்சியினால், சிங்கப்பூரின் மொத்த சனத்தொகை 5.69 மில்லியனுக்குக் குறைந்திருக்கிறது.

கோவிட்-19 நோய்த்தொற்றுக் காரணமாகப் பலர் வேலைவாய்ப்புக்களை இழந்த காரணத்தினாலும், நோய்த் தொற்றின் காரணமாகவும் பலர் தமது நாடுகளுக்குத் திரும்பிச் சென்றிருக்கிறார்கள். பயணக் கட்டுப்பாடுகள் காரணமாகப் புதியவர்கள் நாட்டுக்குள் வரமுடியவில்லை. இதனால் மொத்த சனத்தொகை வீழ்ச்சி சுமார் 2% த்தை எட்டியிருந்தது. ஆனாலும் உள்ளக வளர்ச்சி காரணமாக சனத்தொகை ஓரளவு ஈடுசெய்யப்பட்டிருக்கிறது.

சிங்கப்பூரின் வரலாற்றிலேயே முதல் தடவையாகப் பொருளாதாரச் சுருக்கம், இந்த வருடம், 5%-7% வரை சென்றிருக்கிறது. இதனால் பலர் வேலை வாய்ப்புக்களை இழந்து வருகிறார்கள். உள்நட்டுப் பணியாளர்களுக்கு வேலைகளை வழங்கும் பொருட்டு, வெளிநாட்டுப் பணியாளர்கள் வேலை பெறும் தகமைகளை அரசாங்கம் உயர்த்தி வைத்துள்ளது. சிங்கப்பூரின் குறைந்த வருமானவரிக் கொள்கையால் பல பல்தேசிய நிறுறுவனங்கள் தமது தலைமை அலுவலகங்களைச் சிங்கப்பூரில் அமைத்துள்ளன. உள்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்புக் கொடுக்கவேண்டுமென்ற அரசாங்கத்தின் கொள்கை சிலவேளைகளில் இந் நிறுவனங்களைப் பாதிக்கலாம் என்ற கரிசனையும் உண்டு.



“வெளிநாட்டுப் பணியாளர்களை நாம் ஒதுக்குகின்றோம் என்ற தவறான புரிதல் உலக நிறுவனங்கள் மத்தியில் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதிலும் நாம் கவனமாக இருக்க வேண்டும்” எனப் பிரதமர் லீ சியேன் லூங் தெரிவித்தார்.

சிங்கப்பூரின் குடுயுரிமை பெறாதவர்களின் தொகை, கடந்த 20 வருடங்களில் இரண்டு மடங்கு உயர்ந்திருக்கிறது. உலக நாடுகளில், ஆகக் குறைந்த பிறப்பு வீதத்தைக் கொண்ட நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. இது சிங்கப்பூரின் எதிர்க் கட்சி, குடிவரவுக்கு எதிரான, உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகளில் முதலுரிமை கொடுக்கவேண்டுமென்ற கொள்கைகளைப் பின்பற்றி வருகிறது. இதன் காரணமாகக், கடந்த தேர்தலில் ஆளும் கட்சியான மக்கள் செயற் கட்சி பல ஆசனங்களை இழந்திருந்தது.

Print Friendly, PDF & Email